பூகம்பம் 1000க்கும் மேற்பட்டோர் பலி – 700 பேர் கவலைக்கிடம்

புதுடெல்லி, செப்.9- மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். இதுவரை
1037 பேர் உயிரிழந்துள்ளனர், 1204 பேர் காயமடைந்துள்ளனர்.அதில் 721க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மொராக்கோவில்
6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மொராக்கோவின் பழைய நகரம் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தைச் சுற்றியுள்ள சிவப்பு சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் ஏராளமான பேர் சிக்கி பலியானார்கள். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. வட ஆப்பிரிக்க நாட்டின் 120 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை கண்டிராத சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். பூகம்பத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
முக்கிய பொருளாதார மையமான மராகேச்சில் இருந்து மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் இருந்தது. மொராக்கோவின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை வலையமைப்பு, சுவர்கள் இடிந்து விழுந்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக தெரிவித்தது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 19 நிமிடங்களுக்குப் பிறகு ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்தனர். என்றாலும் இந்த நிலநடுக்கம் பெருமளவில் சேதம் ஏற்படுத்தி உள்ளது