பூமியை இருள் சூழ வரும் சூரிய கிரகணம் – இந்தியாவில் காண முடியுமா?

சூரிய கிரகணம் என்பது பூமிக்கும், சூரியனுக்கும் மத்தியில், நிலவு பயணிக்கும் நிகழ்வு ஆகும். இவ்வாறு நிலவு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் பயணிக்கும்போது அது சூரிய ஒளியை பூமி மீது விழ விடாமல் மறைத்துக்கொள்ளும். இதன் காரணமாக இருள் சூழும். இதுவே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகண நிகழ்வு இன்று நிகழ உள்ளது. இந்த நிகழ்வின் போது பெரும்பாலான பகுதிகளில் இருள் சூழும்.
இந்த நிகழ்வு சுமார் 185 கிலோ மீட்டர் தூரம் வரை பிரதிபலிக்கும். அதன்படி அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் தென்படும். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள 18 மாநிலங்களிலும் இந்த அரிய நிகழ்வை காண முடியும். ஆனால் இந்தியாவில் இந்த நிகழ்வை காண முடியாது. இந்திய நேரப்படி சூரிய கிரகணம் இரவு 9.12 மணிக்கு தொடங்குகிறது. மேலும் சரியாக 10.08 மணிக்கு முழுமை அடைய தொடங்கும். இந்த நிகழ்வு அடுத்த நாள் காலை 2.22 மணிக்கும் நிறைவடையும். சூரிய கிரகணத்தின் முழுமை நிகழ்வு,


முதலில் மெக்சிகோவில் தென்படும் என கூறப்படுகிறது இந்த முழு சூரிய கிரணம் நிறைவடைய சுமார் 2.30 மணி நேரம் ஆகும். ஆனால் முழுமை நிகழ்வு கடைசி 4 நிமிடங்களில் நிகழும். நாசாவின் அறிக்கைப்படி இந்த முழுமை நிகழ்வு 4 நிமிடம் 27 நொடிகள் நீடிக்கும் என்றும், அப்போது பூமி மீது
முழுமையாக இருள் சூழ்ந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை வெறும் கண்களில் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. அது உங்களது கண்களை பாதிக்க கூடும். எனவே சூரிய கிரணத்தை காண்பதற்கு தயாரிக்கப்பட்ட பிரத்யேக கண்ணாடிகளை அணித்துக்கொண்டு இந்த நிகழ்வை காண்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்..