பெங்களூரின் வரலாறுகாணாத வெப்ப‌ இரவுகள்

பெங்களூரு, ஏப். 4: பெங்களூரு நகரம் தற்போது வரலாறு காணாத வெப்பத்தின் பிடியில் உள்ளது. சாதனை படைத்த பகல்நேர வெப்பநிலை அனைவரையும் வியர்வை மழையில் நனைய வைக்கிறது. அதற்கு துயரத்தைச் சேர்க்கும் வகையில், கடந்த சில நாட்களாக வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொடும் வகையில், நகரம் அதன் வெப்பமான இரவுகளில் சிலவற்றைப் பதிவு செய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வுமையத்தின் கூற்றுபடி, பெங்களூரு, திங்கள் மற்றும் செவ்வாய் கடந்த 12 ஆண்டுகளில் நகரத்தின் வெப்பமான இரவுகளை பதிவு செய்துள்ளது. வெப்பநிலை முறையே 24.5 ° மற்றும் 24.3 ° ஆக பதிவாகியுள்ளது.
கோடைக்கால இரவுகள் பொதுவாக பெங்களூரில் குளிர்ச்சியாக இருக்கும். பகலில் வாட்டும் வெப்பத்திற்கு இது நிவாரணம் அளித்து வரும். இருப்பினும், வானிலை ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் வெப்பமான இரவுகளின் போக்கு மற்றும் பகல்நேர வெப்பநிலையுடன் இணைந்து கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் உள்ள வானிலை ஆய்வாளர்கள், நகரம் முழுவதும் இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலையில் சாதனை அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச வெப்பநிலை சாதாரண வெப்பநிலையை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தால் மட்டுமே நெறிமுறை அனுமதிப்பதால், இரவுகளை ‘வெப்பமான இரவுகள்’ என்று அறிவிக்க முடியாது என்று அவர்கள் தெளிவுபடுத்தினர்.”பெங்களூரில் ஏப்ரல் மாதத்திற்கான சாதாரண இரவு நேர வெப்பநிலை (குறைந்தபட்சம்) சுமார் 21-22 டிகிரி செல்சியஸ் ஆகும். இருப்பினும், கடந்த சில நாட்களாக, இரவு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை இரவு வெப்பநிலை 24.5° என்று எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியது. செவ்வாய்க்கிழமை இரவு 24.3° டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.இதற்கு அதிகாலையில் மேகங்கள் உருவானதே காரணம். மேகங்கள் பூமியில் இருந்து வெளிவரும் வெப்பத்தையும் கான்கிரீட் கட்டிடங்களில் இருந்தும் வெளிவரும் வெப்பத்தை பகல் நேரத்தில் உறிஞ்சி வெப்பமான இரவுகளை உருவாக்குகிறது. மேகங்கள் இல்லை என்றால் வழக்கமான கோடை இரவுகளைப் போல இரவுகள் குளிர்ச்சியாக இருந்திருக்கும்” என்று பிரசாத் கூறினார்.