பெங்களூரில் அதிகரித்து வரும் போதை பொருள் பயன்பாடு

பெங்களூரு, ஆக. 24- போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க, பள்ளி, கல்லூரிகளுக்கு போலீசார் தொடர்ந்து வருகை புரிவது அவசியம் என்று குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அண்மை மாதங்களில், மாநகரத்தில் பல போதைப்பொருள் வியாபாரிகளை போலீசார் பிடித்துள்ளனர். மேலும் மாணவர்களாக இருக்கும் பலர் போதைப்பொருள் நுகர்வோர்களில் பெரும் எண்ணிக்கையில் அச்சமூட்டக்கூடிய வகையில் உள்ளனர். பார்ட்டிகளில் நடத்தப்பட்ட ஒருசில சோதனைகளில், சிறார்களும் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போதைப்பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனை பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களால் வரவேற்கப்பட்டாலும், கல்வி நிறுவனங்களில் போலீசார் இருப்பது குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா பிஎம்மிடம் கூறுகையில், போதைப்பொருளின் தீமைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த போலீஸ் குழுக்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்கின்றன. அவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் ஆசிரியர்களுடன் காவல்துறையினரும் கலந்துகொள்வதன் மூலம் இனி பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். இதுகுறித்து கர்நாடகாவின் பெற்றோர் குரல் அமைப்பின் இணைச் செயலாளர் சிஜோ செபாஸ்டியன் கூறுகையில், காவல்துறையின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. மாணவர்களிடையே போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பிரச்சினையின் தீவிரம் குறித்து குறைந்த பார்வை அல்லது புரிதல் உள்ளது என்றார். குழந்தைகள் உரிமை ஆர்வலரும், குழந்தைகள் உரிமை அறக்கட்டளையின் இயக்குனருமான நாகசிம்ம ஜி.ராவ் கூறுகையில், கல்வி நிறுவனங்களுக்கு போலீசார் சென்றால், மாணவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தாத வகையில், மஃப்டியில் செல்ல வேண்டும். போலீசார் பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்பதாக இருந்தால், அவர்கள் சிவில் உடையில் இருக்க வேண்டும். மேலும், சிறப்பு சிறார் காவலர்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் கூட இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உடனிருக்க வேண்டும். அவர்கள் சீருடையில் செல்லாமல் இருப்பது முக்கியம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தக் கூடாது. காவல்துறையில் சிறப்பு சிறார் காவலர் இல்லை என்றால், பள்ளிகளுக்கு செல்லும் முன், இந்த பதவியை உருவாக்கி, குழந்தை உரிமைகள் மற்றும் சிறார் செயல்கள் குறித்து அவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்றார். எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் சீருடையில் பள்ளிக்கு சென்றால், அது சிறார் நீதிச் சட்டத்தை மீறும் செயலாகும். பள்ளிக்குச் செல்வதற்கு முன், பெற்றோரின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது, போதைப் பழக்கம் மற்றும் பிற குழந்தை தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கு நண்ப‌ராக இருக்க வேண்டும் என்றார். செபாஸ்டியனின் கூற்றுப்படி, அச்சுறுத்தல்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு நல்ல புரிதல் இருப்பதால், காவல்துறையின் தொடர்புகள் உதவியாக இருக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் மட்டுமே பார்க்கிறார்கள். வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கலாம். ஆசிரியர்களைப் போலவே, போதைப்பொருள்களுக்கு எதிரான அத்தியாயங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். ஆனால் அவர்களால் குழந்தைகளை நாள் முழுவதும் கண்காணிக்க முடியாது. பெற்றோர், ஆசிரியர்களின் கூட்டு முயற்சி. போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக குழந்தைகளுக்கு பாதுகாப்பு கவசத்தை காவல் துறை உருவாக்கி, பிரச்சினையின் தீவிரம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் வேண்டும் என்றார். நகரத்தில், குறைந்தது 15 காவல் நிலையங்களில் ஒரு சிறப்பு சிறார் காவல் பிரிவு இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை அவர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்குச் சென்று கூட்டம் நடத்த வேண்டும் என்று குழந்தை உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். இது குறித்து காவல்துறை ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.