பெங்களூரில் அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி இல்லை

பெங்களூரு, செப். 13: பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை தவிர மற்ற அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பு ஊசிகள் கையிருப்பில் இல்லை.
பெங்களூரில் உள்ள சில பெரிய அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பு ஊசிகள் தீர்ந்துவிட்டன. பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை ஒன்றில் மட்டுமே உயிர்காக்கும் ரேபிஸ் தடுப்பு ஊசிகள் கையிருப்பில் உள்ளது.
இஎஸ்ஐ மருத்துவமனையும், பிஎம்சிஆர்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் தங்களிடம் ரேபிஸ் தடுப்பு ஊசிகள் இல்லை என்று தெரிவித்தன. விக்டோரியா மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
விக்டோரியாவில் உள்ள ரேபிஸ் தடுப்பு வார்டில், நாய் கடியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு மருத்துவமனை ஊழியர்கள் விரைவாக சிகிச்சை அளித்தனர். மல்லேஸ்வரத்தில் உள்ள கேசி பொது மருத்துவமனை மற்றும் பௌரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனை தொலைப்பேசி அழைப்புகளை ஏற்கவில்லை. ஆன்லைனில் பட்டியலிடப்பட்ட ஜெயநகர் பொது மருத்துவமனையின் தொலைபேசி எண் தவறானது.
கேசி பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் இந்திரா கபாடே, ரேபிஸ் தடுப்பு ஊசிகள் இருப்பில் உள்ளதாகவும், தடுப்பூசியின் விலை ரூ.100 மற்றும் பிபிஎல் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கபடுவதாகவும் தெரிவித்தார்.
பிபிஎம்பியின் கால்நடை வளர்ப்பு உதவி இயக்குநர் டாக்டர் மஞ்சுநாத் ஷிண்டே கூறுகையில், “மூன்றாம் நிலை நாய் கடித்தால் பொதுவாக வழங்கப்படும் ஹைப்பர் இம்யூனோகுளோபுலின் (ஆர்ஐஜி) ஹைப்பர் இம்யூனோகுளோபுலின் பிபிஎம்பி பரிந்துரை செய்துள்ள‌ மருத்துவமனைகளில் கிடைக்கும்.
ஸ்ரீராமபுரம் ரெஃபரல் மருத்துவமனையில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகக் கூறினர். மாகடி ரோடு மகப்பேறு இல்லத்தில் ரேபிஸ் தடுப்பு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மருத்துவமனை பொறுப்பாளர் டாக்டர் ராதா ஜி தெரிவித்தார்.
மூன்றாம் நிலை கடித்தலுக்குத் தேவையான ரேபிஸ் எதிர்ப்பு மருந்துகள் தற்போது இந்த மருத்துவமனையில் இல்லை என்று அவர் தெரிவித்தார். மற்ற பொது சுகாதார மையங்கள் தொலைப்பேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆன்லைனில் பட்டியலிடப்பட்ட சில தொலைபேசி எண்கள் சேவையில் இல்லை.தனியார் மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பு மருந்துகள் 24 மணி நேரமும் கிடைக்கும் என்று தெரிவித்தனர். சேஷாத்ரிபுரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பு ஊசிகள் ரூ.350, கோரமங்களாவில் ரூ.400 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அசோக்நகரில் உள்ள வைதேஹி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்,ரேபிஸ் தடுப்பு ஊசிகள் 24 மணி நேரமும் கிடைக்கின்றன. அதன் விலை ரூ. 397. கன்னிங்ஹாம் சாலையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் ரேபிஸ் ஊசிகள் போடப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.