பெங்களூரில் ஆண்டுக்கு சராசரியாக 5.5 கி.மீ மெட்ரோ பாதை அமைப்பு

பெங்களூரு, அக். 20- பெங்களூரில் 12 ஆண்டுகளில், மெட்ரோ ரயில் கழகம் ஆண்டுக்கு சராசரியாக 5.5 கி.மீ மெட்ரோ பாதையை அமைத்துள்ளது. பெங்களூரின் நம்ம மெட்ரோ ரயிலுக்கு நேன்றுடன் 12 வயது நிறைவடைந்தது. மாநகரின் விரைவு வெகுஜன போக்குவரத்து அமைப்பின் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திலிருந்து 7.5 லட்சமாக அதிகரித்துள்ளது. வருவாய் 50 மடங்கு அதிகரித்து ரூ.1.8 கோடியைத் தொட்டுள்ளது. ஆனால் பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் (BMRCL), நம்ம மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5.5 கி.மீ மட்டுமே சேர்த்துள்ளது. 13வது ஆண்டு செயல்பாட்டில் நுழைவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பிஎம்ஆர்சிஎல் அதன் முழு ஊதா லைனில் செல்லகட்டா-ஒயிட்ஃபீல்ட் (காடுகோடி) வரை அக். 9 ஆம் தேதி திறந்தது. பல நீட்டிப்புகள் மற்றும் இரண்டாம் கட்டம், 2ஏ மற்றும் 2பி பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. கட்டம் 2, 2ஏ மற்றும் 2பியின் கீழ் மற்றொரு 98 கிமீ 2026 ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்ஆர்சிஎல் பல்வேறு கட்ட 2 ஆம் வழித்தடங்களில் வணிக நடவடிக்கைகளை இயக்கியிருந்தால், மெட்ரோ பெங்களூருவாசிகளுக்கு பெரிய அளவில் உதவியிருக்கக் கூடும். 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் 6.7-கிமீ எம்ஜி சாலை-பைப்பனஹள்ளி வழித்தடத்தில் இயக்கியப்போது, ​​மாநகரத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45.5 லட்சமாக இருந்தது. தற்போது மாநகரின் வாகன எண்ணிக்கை, அதிவேகமாக உயர்ந்து இப்போது 1.1 கோடிக்கு அதிகமாக உள்ளது. மாநகரின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் ஐடி மூலதனத்தின் நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கிறது. பிஎம்ஆர்சிஎல் அதிக லைன்களை இயக்குவதற்கு அதிக நேரத்தை வாங்கும் அதே வேளையில், பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் வாகன எண்ணிக்கை 6,500 லிருந்து அதிகமாக உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.