பெங்களூரில் ஆபத்தான நிலையில் நடை மேம்பாலம்

பெங்களூரு, செப். 16: பெங்களூரில் ஒரு நடை மேம்பாலத்தில் (ஸ்கைவாக்) நடப்பது ஆபத்தாக உள்ளது. ஓசூர் சாலையில் உள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழகம் அருகே உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான ஸ்கைவாக், கனரக வாகனங்களால் கடுமையான சேதத்தை சந்தித்தது, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஸ்கைவாக்கில் சில பாதசாரிகள் பாதிக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். கனரக வாகனங்களின் தாக்கத்தால் ஸ்கைவாக்கின் உலோக கட்டமைப்புகள் அம்பலமாகி ஆபத்தான நிலையில் உள்ளன. வழக்கமான பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் ஸ்கைவாக்குகள் போன்ற முக்கியமான பொது உள்கட்டமைப்புகளை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது அப்பகுதியில் பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறித்து கிறிஸ்ட் பல்கலைக்கழக மாணவர் ராஜேஷ் கூறுகையில், “ஸ்கைவாக் மூலம் ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்திற்குச் செல்வதால், அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அரசு போதிய நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும். குறிப்பிட்ட சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் ஸ்கைவாக்கின் தாழ்வான பகுதி சேதமடைந்து அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தார். இந்த ஸ்கைவாக்கை விரைவில் சீரமைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்இ துகுறித்து கிறிஸ்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவி சௌம்யா கூறுகையில், இந்த ஸ்கைவாக் நாள் முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் அதிகம் பயன்படுத்தும் . மேல் பகுதி நன்றாக உள்ளது. ஆனால் ஸ்கைவாக்கின் கீழ் பகுதி சேதமடைந்துள்ளது. கனரக டிரக் மோதி, அதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. எனவே, அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, அதை விரைவில் சரிசெய்வது நல்லது. சமூகத்தின் நலனுக்காக பொது உள்கட்டமைப்பைப் பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான‌ விழிப்புணர்வின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.