பெங்களூரில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் கிரிக்கெட் – பலத்த பாதுகாப்பு

பெங்களூரு, அக். 20: பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டியின் போது எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் முன் அங்கீகரிக்கப்பட்ட பிளக்ஸ் கார்டுகள் மட்டுமே பயன்படுத்துவது குறித்து மாநகர போலீசார் உறுதி செய்துள்ளனர்.போட்டிக்கான அவர்களின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளியில் இருந்து எந்த ஒரு பதாதைகள், விளம்பர‌ பலகைகள் எதுவும் மைதானத்திற்குள் கொண்டு வருவதற்கு தடை விதித்திருப்பதனை போலீசார் உறுதி செய்துள்ளனர். அதற்கு பதிலாக, போலீஸ் மற்றும் ஸ்டேடியம் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பதாதகை மட்டுமே இருக்கைகளில் வைக்கப்படும் மற்றும் ரசிகர்கள் பயன்படுத்த முடியும் என்று பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பி.தயானந்த தெரிவித்தார்.ஸ்டேடியம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அதிகாரிகள் நன்கு அறிந்துள்ளனர். மேலும் மக்கள் எந்தெந்த வழிகளில் உள்ளே மற்றும் வெளியே செல்வார்கள் என்பதற்கான திட்டத்தை வைத்துள்ளனர்.
“வீரர்கள் மற்றும் மைதானத்திற்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படும். அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி முழுமையாக விளக்கப்பட்டுள்ளது” என்று உயர் போலீஸ் தெரிவித்தார்.

அண்மையில் பாகிஸ்தான் அணி பங்கேற்ற போட்டியில் அந்த அணியில் வீரர்களை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் விமர்சித்ததாக கூறப்படும் நிலையில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.