பெங்களூரில் இந்த கோடையிலும் வற்றாத கிணறுகள்

பெங்களூர், மே 2- நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் பெங்களூரு நகரின் பல பகுதிகளில் போர்வெல்கல் வற்றிப்போய் தண்ணீருக்காக மக்கள் அலையும் நிலையில் எலஹங்கா தாலூகாவின் சொன்னப்பனஹள்ளி மற்றும் ஹன்ஸமாரனஹள்ளி கிராமங்களில் திறந்த வெளி கிணறுகள் மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றன. இந்த இரண்டு கிராமங்களில் ஐம்பதாண்டுகளுக்கும் பழைமையான பல திறந்த கிணறுகள் உள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த கிணறுகளை பயன் படுத்துவது நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பையோ என்விரான்மென்டல் அறக்கட்டளையினர் பத்து லட்ச பெருங்காய கிணறுகள் என்ற பிரசாரத்தை துவங்கி புரவங்கரா நிறுவனத்துடன் இணைந்து இங்கிருந்த திறந்தவெளி கிணறுகளை சீர்படுத்தியுள்ளனர். . இந்த கிணறுகளே இப்போது இப்பகுதி மக்களுக்கு வரப்ரசாதமாகியுள்ளது. ஆர் எஸ் ஷிவானந்த் பள்ளிக்கு மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நிறுவ சொன்னப்பனஹள்ளிக்கு சென்ற போது பள்ளி முதல்வர் வெங்கடேகௌடரால் கிராமத்தில் திறந்த கிணறுகள் இருக்கும் தகவல் கிடைத்துள்ளது. பின்னர் புரவங்கரா நிறுவன சி எஸ் ஆர் நிதியில் மண்ணு ஒடடர சமுதாயத்தை சேர்ந்த ஷங்கர் உதவியுடன் பள்ளியின் சுற்றுப்பகுதியில் மூன்று மற்றும் ஹுனசமாரனஹள்ளியில் மூன்று கிணறுகள் சீர்படுத்தப்பட்டன. என இந்த அறக்கட்டளையை சேர்ந்த எஸ் விஸ்வநாத் தெரிவித்தார் சீரமைக்கப்பட்ட மூன்று கிணறுகளை நகரசபையிருந்து மோட்டார் பம்ப் பயன்படுத்தி சுற்றுப்பகுதி வீடுகளுக்கு தொடந்து தண்ணீர் கிடைத்து வருகிறது. மற்ற மூன்று கிணறுகளை பம்ப் பொருத்துவது வேண்டாம் பம்ப் பயன்படுத்தினால் தண்ணீர் வேகமாக காலியாகி விடுகிறது. நாங்கள் சேந்திக்கொண்டே பயன்படுத்துகிறோம் என பெண்கள் கேட்டுக்கொண்டார்கள். இதனால் கிணறுகளுக்கு இரும்பு வேலி மற்றும் ராட்டினம் போடப்பட்டுள்ளது . மக்கள் இங்கிருந்து சேந்தி தண்ணீரை பயன்படுத்திவருகிறார்கள். ஷங்கர் மாதம் ஒருமுறை ஏரியை சுத்தப்படுத்துகிறார். இந்த கிராமத்தை சேர்ந்த ஹோசமனே கிரிஷ்னப்பா என்பவர் கூறுகையில் எங்கள் தந்தை காலத்திலிருந்தே இந்த கிணற்று தண்ணீரை பயன்படுத்திவருகிறோம். குடிக்க மற்றும் சமையல் இரண்டுக்கும் இந்த தண்ணீர் பயன் படுகிறது. தண்ணீர் தெளிவாக நல்ல ருசியுடன் உள்ளது.
பல குடும்பங்களுக்கு இந்த கிணறு வரப்ரசாதமாய் இருப்பதுடன் வெய்யில் காலத்திலும் தண்ணீர் வற்றுவதில்லை என்றார். இந்த கிராமங்களின் அருகில் உள்ள பெட்டஹல்சூரு குன்றின் தாழ்வு பகுதியில் தண்ணீர் சேமிக்கப்ட்டுள்ளது . தவிர இந்த குன்றின் அருகில் உள்ள ஏரியில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருக்கும் . இதனால் கிணறுகளில் ஆண்டு முழுக்க தண்ணீர் கிடைத்து வருகிறது.