பெங்களூரில் இன்றுஇடியுடன் கனமழை பெய்யும்

பெங்களூர், அக் 13-பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் புயல் வீசும் என மாநில வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சிலிகான் சிட்டியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் எனத் தெரியவந்துள்ளது. பெங்களூர் நகரம் ,சாம்ராஜ்நகர், குடகு, மண்டியா ,பெங்களூர் ரூரல், ராம் நகர், உட்பட தெற்கு உள் மாவட்டங்களில் மழை பெய்யும் .மழையின் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் .அவ்வப்போது பலத்த காற்றும் வீச கூடும். அக்டோபர் 21ம் தேதி வரை கனமழை மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் பெய்யும். கடலோர மாவட்டங்களிலும் கன மழை பெய்யும். அங்கு குடியிருப்போர் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். மீனவர்களும் கடலுக்குள் செல்வோர் எச்சரிக்கும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அக்டோபர் மாதம் நல்ல மழை பெய்து உள்ளதால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிய வந்துள்ளது.