
பெங்களூர், மார்ச் 8-
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெங்களூரில் இன்று
பி எம் டி சி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்
வஜ்ரா, வாயு வஜ்ரா
ஆகிய ஏ.சி., பஸ்களிலும் கூட இலவச பயணம் மேற்கொண்டனர்
பெங்களூரில் தினமும் 29 லட்சம் பேர் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். இதில் 25 முதல் 30% வரை பெண்கள் பயணம் செய்கின்றனர்.
எனவே, சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8-ம் தேதி இன்று 20 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயணம் செய்யலாம் என்று பிஎம்டிசி கருதுகிறது. எனவே பெண்கள் பி.எம்.டி.சி. பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று
இதற்கான அறிவிப்பை நேற்று செவ்வாய்க்கிழமை
அறிவித்தது. இதன்படி பெங்களூரில் பெண்கள் இன்று இலவசமாக பஸ் பயணம் செய்து மகிழ்ந்தனர்.