பெங்களூரில் இயற்கைக்கு மாறாக வெப்பநிலை

பெங்களூர் : பிப்ரவரி . 6 – இந்த மாத துவக்கத்திலிருந்து நகரில் தற்போது உஷ்ண நிலை 31 டிகிரி செல்ஸியஸ் ஆகஉள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் பிற்பகல் நேரங்களில் மிகவும் பாதிப்புள்ளகி வருகின்றனர். ஆனாலும் நகரின் சீதோஷ்ண ஆய்வு மையம் தெரிவிக்கும்படி கடந்த 30 ஆண்டு கால சரித்திரத்தில் நகரில் அந்த அளவிற்கு உஷண மாற்றம் இல்லை. என தெரிவித்துள்ளது . நகரில் தற்போது அதிக பட்ச உஷ்ணநிலை 30.9 டிகிரியாயாகவும் குறைந்த பட்ச உஷ்னநிலை 17.6 டிகிரீயாகவும் உள்ளது. இதில் ஓரிரண்டு டிகிரீக்கள் ஏற்றம் தாழ்வு இருப்பதால் இது பெரிய அளவிலினான மாற்றம் இல்லை எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு கடற்கரை பகுதிகளில் நில பகுதிகளை சமன்படுத்தும் சூழல் தற்போது உருவாகியுள்ளது . தவிர உலகளவிலான வெப்பமயமாக்குதலால் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் அதிக உஷ்ணத்தை அனுபவிக்க வேண்டி வருகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதம் குளிர் மாதமாக இருந்து வந்து போதிலும் இந்த ஆண்டு உஷ்ணம் சற்று அதிகமாக உள்ளது. இந்த நிலை மாறும் என முன்னர் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தும் தற்போது இந்த நிலை வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என தெரிகிறது . அடுத்து வரும் நாட்களில் வெயிலின் உஷ்னம் அதிகரித்தாலும் கடலோர மாவட்டங்களில் உஷ்ண அலைகளுக்கான வாய்ப்புகள் தற்போதைக்கு இல்லை. ஆனாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை வெயில் பலமாக இருக்கும். மாநிலத்தில் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் 7 செ மீ மழை வழக்கம் எனினும் இந்தாண்டு இது இன்னும் குறைவாக கூடும். என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.