பெங்களூரில் இரட்டைக் கொலை


பெங்களூரு, ஏப். 8- தாய் மற்றும் மகனின் நண்பன் உட்பட இரண்டு பேரை ஆய்தங்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஜே .பி நகரில் நேற்று இரவு நடந்துள்ளது. ஜே பி நகரின் சந்த்ருப்தி நகரில் மமதா பசு (55) மற்றும் அவருடைய மகனின் நண்பன் சுஷாந்த் என்பவரையும் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

மமதா பசு வின் மகனுடைய நண்பன் நேற்றுதான் ஒரிஸ்ஸாவிலிருந்து வந்திருந்தான். மகனின் நண்பன் மற்றும் மமதா பசுவை நேற்று இரவு 12. 30 மணியளவில் மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். கொலை செய்வதற்கு முன்னர் வீட்டின் முன் பகுதியில் இருந்த சி சி டி கேமிராக்களை உடைத்துள்ளனர். கொலை நடந்துள்ள தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த புட்டேனஹள்ளி போலீசார் சோதனை நடத்தி விசாரணையில் இறங்கியுள்ளதாக டி சி பி ஹரிஷ் பாண்டே தெரிவித்தார்.