பெங்களூரில் இளம் பெண்கள் கடத்தல் அதிகரிப்பு

பெங்களூர் : ஏப்ரல் 3 – நகரில் பருவ பெண்களை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்திவருவது தொடர்ந்து வரும் நிலையில் இது குறித்து க்ளோபல் கன்ஸ்ரன்ஸ் இந்தியா என்ற தன்னார்வ இயக்கத்தை நடத்திவரும் பிருந்தா அடிகே கூறுகையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் பாலியலுக்காக கடத்தப்பட்ட ஒரு பருவ பெண் மற்ற மாணவிகளை தங்கள் வலைக்கு இழுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஒரு கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளாள். இந்த பருவ பெண் மிகவும் அழகானவள். இவளை பார்த்தால் யாருமே இவள் அப்படிப்பட்ட பெண் என்று சந்தேகிக்கமாட்டார்கள். ஆனால் தங்கள் கட்டளைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் குடுமப மானத்தை எடுத்துவிடுவோம் என இந்த பெண்ணை கடத்தியவர்கள் அவளை மிரட்டியுள்ளனர். இப்படி ஒரு பருவ பெண் சமீபத்தில் தங்கள் தொழில் நுட்ப ஊழியர் தம்பதி வீட்டிலிருந்து மீட்கப்பட்டாள் . இவளுடைய அடையாள அட்டைகள் மற்றும் இதர ஆவணங்கள் தம்பதியரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த இளம் பெண் குப்பை கொட்டுவதற்கு தவிர வேறெந்த காரணத்திற்கும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பப்படவில்லை. இந்த இளம் பெண்ணை கணவன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்தது மனைவிக்கும் தெரியும். இந்த பருவ பெண்ணை மீட்க ஆறு மாதங்கள் பிடித்தது. இந்த பாலியல் கடத்தல் வலையில் ஆப்ரிக்க நாட்டின் உகண்டா , நைஜீரியா , கென்யா ஆகிய பகுதிகளை சேர்ந்த இளம் பெண்கள் எளிதில் விழுந்து விடுகின்றனர். இந்த பருவ பெண்கள் மேற்கல்விக்காக நகருக்கு வந்தவர்கள் என்றாலும் பாலியல் கடத்தல் செய்யும் நபர்களிடம் சிக்கி இவர்கலாய் மயக்கி அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளும் பறிக்கப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த வகையில் ஒரு பருவ பெண் அவளுடைய சொந்த நாடான கென்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுளாள் . இவள் சில நைஜிரியாவை சேர்ந்த மாணவிகளிடம் பிடிபட்டு அவர்களிடம் தன் பாஸ்போர்ட்டை இழந்திருந்தார். இவளை பெங்களூரிலிருந்து கோவாவுக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவளிடம் போன் இருந்ததில் நாங்கள் அவளை மீட்க முடிந்தது. போலீசாரும் தங்களால் இயன்ற வரையில் இது போன்ற குற்றங்களை தடுக்க நடவிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.சமீபத்தில் கூட தாய் மசாஜ் பார்லரில் நடந்து வந்த விபச்சாரத்தை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஆப்ரிக்க , தாய்லாந்து , மற்றும் இதர கிழக்கு ஐரோப்பிய நாதுகளை சேர்ந்த இளம் பெண்கள் கடத்தப்பட்டிருந்தனர். இந்த பருவ பெண்கள் கடத்தல் விவகாரங்களில் பல முக்கிய புள்ளிகளின் பங்களிப்பு இருப்பதால் அவர்கள் பெயர்களை நாங்கள் வெளிப்படுத்துவதும் கஷ்டமானது. இதே போல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சட்டத்துக்கு புறம்பான ஒரு அனாதை இல்லத்தில் இத்தகைய பாலியல் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய அதிநவீன தொழில்நுட்ப தொடர்பு வசதிகளால் இத்தகைய குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. தவிர கடத்தப்பட்ட பருவ பெண்களை எப்போதுமே ஒரு காவலன் கண்காணித்து வருவான். பாலியல் விவகாரத்திற்க்கான கட்டணங்கள் அனைத்தும் வெறும் வலைதளங்களில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இந்த முறைகள் கடந்த கொரோனா காலத்திலிருந்து துவங்கியுள்ளன. இந்த குற்றங்களை தவிர்ப்பதில் பல சூட்சும விஷயங்கள் உள்ளன. அரசின் இளம் பெண்கள் கடத்தல் தடுப்பு சட்டங்கள் பலம் வாய்ந்ததாக இல்லை. அரசின் இத்தகைய ஒரு குழுவிற்ற்கு என் இயக்கமும் உறுப்பினர் என்றாலும் பல ஆண்டுகளாக ஒரு கூட்டம் கூட நடத்த வில்லை. இது தொடர்பான வழக்குகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் விசாரணை நடத்தப்படுவதுடன் இதில் தன்னார்வ மற்றும் சமூக னால ஊழியர்கள் இம்சிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழுவுக்காக அரசு உருவாக்கிய திட்டம் உஜ்வாலா. இந்த திட்டம் இளம் பெண்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பது பாதுகாப்பது , மீட்பது மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அமைப்பது ஆகியவை உட்கொண்டது. இந்த பொறுப்புகள் ஒவ்வொன்றும் வெவேறு பிரிவினரால் கண்காணிக்கப்பட வேண்டும் என்றாலும் தற்போதைய நிலையில் இவை அனைத்தையுமே அரசு மட்டுமே கண்காணித்துவருகிறது. தவிர பாதிக்கப்பட்ட பெண்ணீய அல்லது தொண்டு நிறுவனங்களோ போலீஸ் நிலையத்திற்கு வந்து ஏ பி கோ பிரிவு 370ன் கீழ் வழக்கு பதிவு செய்ய கேட்டால் போலீசார் மறுக்கிறார்கள். இது ஜாமீன் இல்லாத கடுமையான சட்ட பிரிவாகும். இந்த நிலையில் பல குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றும் அல்லது மீட்கும் முயற்சியில் ஈடுபடும் சமூக தொண்டர் அல்லது இயக்கம் தொழிலாளர் மற்றும் சமூக நல துறை பிரதிநிதி , பெண் போலீசார் , மருத்துவர்கள், ஆகியோரை அழைத்து சென்றாக வேண்டும். இது மிகவும் கடினமான பணி . தவிர மற்ற துறைகளுக்கு தகுதியில்லாத அதிகாரிகளை இந்த துறைக்கு மாற்றி நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஊக்க ஊதியம் எதுவும் இருப்பது இல்லை. எனவே அவர்கள் முழு கடமை உணர்வுடன் செயல்படுவதில்லை. இந்த வழக்குகள் குறித்து நீதிமன்றங்களும் விரைவு விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும். பெண்கள் கடத்தப்படும் முறைகள் குறித்து அனைத்து நகரங்கள் பட்டணங்கள் மற்றும் கிராமங்களில் அரசு மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் இவ்வாறு பிருந்தா அடிகே கூறினார்.