பெங்களூரில் ஏரிகள் மேம்பாடு நிதி குறைப்பு

பெங்களூர், மார்ச் 1-
ஏரிகள் மேம்படுத்த பராமரிக்க நிதி இவ்வாண்டு கணிசமாக குறைந்துள்ளது. பெங்களூர் மாநகராட்சி ஏரிகள் மேம்பாடு முதலில் முன்னுரிமையாக கருதப்பட்டது. ஆனால் இம்முறை அவை குறைந்திருக்கிறது. கடந்த 2023 -24 ம் ஆண்டில் 102 .32 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நடைபாண்டு 2024-25 ல் வெறும் 35 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏரிகள் வெள்ளத்தை தணிக்க முக்கிய பங்களிப்பாக இருந்து வருகிறது. பருவ மழை போதும் நகரில் காணும் வெள்ளத்தால் ஏரிகள் நிலை மிகவும் முக்கியமானது என கருத தவறி விட்டனர். பெங்களூரில் மொத்தம் 205 ஏரிகள் உள்ளது. கடந்த ஆண்டு 114 ஏரிகளை மட்டுமே மேம்படுத்தப்பட்டது.
தற்போது வெறும் 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளனர். ஏரிகளில் வேலி அமைக்கும் பணி, காற்றோட்டம் அமைத்தல், சதுப்பு நில மேம்பாடு, குப்பை தடுப்புகள் அமைத்தல் ,ஏரிகளில் கழிப்பறைகள், பாதுகாப்பு அறைகள் கட்டுதல் உள்ளிட்டவைகளை மேம்படுத்த வேண்டும்.
ஆனால் நிதி 35 கோடி போதுமானதாக இல்லை.
பட்ஜெட் ஒதுக்கீடு குறைவாக இருந்தாலும் ஏரி மேம்படுத்த கார்ப்பரேட் ,பொதுமக்கள் முதலீடுகளை பெற ‘பூங்கா பாதுகாப்பு கொள்கைக்கான சமூக ஈடுபாடு’ எனும் சிஐபிஎல் அறிமுகப்படுத்த பெங்களூர் மாநகராட்சி முன்வந்துள்ளது.
இந்த கொள்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்ததும் அவைகளை நடைமுறைப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.