பெங்களூரில் ஏழைகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

பெங்களூரு, நவ. 29: விளிம்புநிலையில் உள்ள இந்த மக்களும் உண்மையான அர்த்தத்தில் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று இந்திய அறிவியல் கழகத்தின், நிலையான போக்குவரத்து ஆய்வகத்தின் பேராசிரியர் ஆஷிஷ் வர்மா தெரிவித்தார்.
பெங்களூர் நகரின் மக்கள்தொகையில் 44% மக்கள் வசிக்கும் 640 முறைசாரா குடியேற்றங்களுடன், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து சிக்கல்களைத் தீர்க்குமாறு பெங்களூருவைச் சேர்ந்த கூட்டமைப்பு, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
“முறைசாரா துறையில் வசிப்பவர்கள், நிலையற்ற வீடுகள், மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து அணுகல், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நலன்களின் நியாயமற்ற விநியோகம் மற்றும் கொள்கைகள் போன்ற பிரச்சினைகளை அடிக்கடி சமாளிக்கின்றனர். இந்த நீண்டகால சவால்களை அங்கீகரிப்பது முக்கியம்” மன்றம் கூறியது. இந்தக் குழு விவாதம் முக்கியமான தலைப்புகளை ஆராய்ந்தது.
“நல்ல நகர்ப்புற பொதுப் போக்குவரத்து அமைப்புகள் மாசு குறைப்புக் கண்ணோட்டத்தில் முக்கியமானவை அல்ல. குடியிருப்பாளர்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதிலும் முக்கியமானவை என்று அல்லி செரோனாவைச் சேர்ந்த கனிஷ்க் கபிராஜ் கூறினார்.இந்திய அறிவியல் கழகத்தின், நிலையான போக்குவரத்து ஆய்வகத்தின் பேராசிரியர் ஆஷிஷ் வர்மா, நகரம் விரிவடைந்துள்ளது. ஆனால் பல முறைசாரா குடியேற்றங்கள் பல தசாப்தங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே உள்ளன. “நகரம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மக்களை மையப்படுத்தியதாகவும் மாற, விளிம்புநிலையில் உள்ள இந்த மக்களும் உண்மையான அர்த்தத்தில் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றார்.