பெங்களூரில் ஒரு வாரத்தில் ஆயிரம் மரங்கள் விழுந்தன

பெங்களூர் : மே. 14 – நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைகளால் மே 6 முதல் 12 வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சார்ந்துள்ளன. எனவே மாநகராட்சி இதனால் ஏற்பட்டுள்ள சாலை தடைகளை தவிர்க்கும் பொருட்டு அந்தந்த இடங்களிலேயே மரங்களை விற்று வருகின்றது .
இந்த மரங்களை உடனடியாக அகற்றும் அளவிற்கு மாநகராட்சியிடம் வசதிகள் இல்லை. எனவே கீழே விழுந்த மரங்களை அந்தந்த இடங்களிலேயே மாநகராட்சி விற்று வருகிறது. சாலைகளில் மர கிளைகள் நிரம்பி வாகன போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதை தவிர்க்கவே மாநகராட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே மாநகராட்சியின் வனப்பிரிவு அதிகாரிகள் இதற்கென தலைமை ஆணையர் துஷார் கிரிநாத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். மே மாத முதல் இரண்டு வாரங்களில் மரங்கள் விழுந்த புகார்களை கவனிக்க 39 குழுக்கள் பணியமர்த்தப்பட்டன. வன பிரிவு துறையினர் விழுந்த மர கிளைகளை சாலையோரங்களில் வைத்திருப்பது வழக்கம். பின்னர் அவை வனத்துறை டிப்போக்களுக்கு ஏற்றி செல்லப்படும்.
இதற்கென நகரில் எட்டு டிப்போக்கள் உள்ளன. ஆனால் ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கில் வரன்கள் விழுந்தால் அவை அனைத்தையும் உடனடியாக ஏற்றி செல்வது கடினம். எனவே அந்தந்த இடங்களிலேயே அவற்றை விற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மரங்களை அகற்றும் பணி மிக தாமதமாக நடந்து வருகிறது என்பதை அதிகாரிகளே ஒப்புட்டுக்கொள்கின்றனர். இதற்கென எட்டு ட்ராக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.