பெங்களூரில் ஒரே ஆண்டில் 10 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

பெங்களூர், டிச.17-
பெங்களூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு 10,468 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்துள்ளது. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக நான்கு பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த ஆண்டு 10,468 பேருக்கு டெங்கு நோய் பாதித்ததாக பதிவு செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே அதிக எண்ணிக்கை என தெரிய வந்துள்ளது. நடப்பு ஆண்டு நான்கு பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்கள். இருப்பினும் ஜூலை முதல், நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதித்துள்ளது.
வானிலை ஏற்படும் மாற்றம் இதன் எண்ணிக்கையை அதிகப் படுத்திமயுள்ளது.
குளிர் காலம் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரிக்காது. இருப்பினும் நவம்பர் இடையே விடாமல் மழை பெய்ய தாமதமானதால குளிரும் தொடங்கியது இதனால் டெங்கு அதிகரிக்க வாய்ப்பானது என்று பெங்களூரை சேர்ந்த டாக்டர் வந்தானா தெரிவித்தார்.
டெங்கு பாதித்தவர்களின் வீடுகளில் கண்டறிந்து அந்த வீட்டை சுற்றி பார்வையிட்டு, மேலும் நோய் பரவாமல் தடுக்க சோதனை செய்யப்படுகிறது.அதனை அடுத்து முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மூடுப் பனி தொடர்ந்து இருப்பதால், மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.கொசுக்கள் பெரும் இடங்களில் கொல்லை புறம், தோட்டங்கள் கொண்ட வீடுகளையே கண்காணித்து வருகிறார்கள்.தோட்டங்களை சரியாக பராமரிக்காததால் அங்கு தான் கொசுக்கள் உற்பத்தியாகிறது. நோய்களும் அதிகளவு பரவுகிறது.டிசம்பர் முதல் 10 நாட்களில் மட்டும் 241 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
வெப்பம் நிலை குறைவதால் இதன் தாக்கமும் குறையும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.