பெங்களூரில் ஒரே நேரத்தில் 300 இடங்களில்காங்கிரஸ் போராட்டம்

பெங்களூர் : ஜனவரி. 23 – மாநிலத்தில் தூய்மையான ஆட்சி மற்றும் அடிப்படைவசதிகளை வற்புறுத்தி நகர் முழுக்க இன்று 300 இடங்களில் மாநில காங்கிரஸ் கட்சியினர் மௌன போராட்டம் நடத்தினர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநில பொறுப்பாளர் ரந்தீப் சிங்க் சுரஜ்வாலா உட்பட மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் , மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா , ஆகியோர் நகரின் ட்ரினிட்டி சர்க்கிளில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நகரில் உள்ள சாலை குழிக்கள் மற்றும் மெட்ரோ திட்டப்பணி அவலங்கள் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆட்சி மீதான வெறுப்புணர்வை தங்களுக்கு சாதமாக்கிக்கொள்ள காங்கிரஸ் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இது குறித்து எம் எல் ஏ ஹாரிஸ் மேலும் கூறுகையில் இன்று நடக்க உள்ள இந்த மௌன போராட்டம் நகரின் 51 மெட்ரோ ரயில் நிலையங்கள் , 26 மேம்பாலங்கள் மற்றும் 200 முக்கிய சாலை சந்திப்புகளில் நடக்கும் என்றார். தவிர இந்த போராட்டத்தின்போது காங்கிரஸ் தொண்டர்கள் வெறும் மாநில அரசின் பல்வேறு ஊழல்கள் குறித்து பதாகைகளை வைத்து மௌன போராட்டத்தில் ஈடுபடுவதால் இதனால் நகரில் எவ்வித போக்குவரத்து பிரச்சனையும் ஏற்படாது என்றும் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.