பெங்களூரில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்

பெங்களூர், பிப்.7-
நம்ம மெட்ரோ ரயில் முதல் முறையாக ‘ஓட்டுநர் இல்லாமல்’ இயங்கும். இந்த ரயில் சீனாவில் இருந்து செவ்வாய்க்கிழமை சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.நீண்ட கால தாமதமான மஞ்சள் பாதைக்கான நம்பிக்கையை இது ஏற்படுத்தி உள்ளது.
ஜெயதேவா மருத்துவமனை, சில்க் போர்டு, மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி வழியாக ஆர்.வி சாலையை, பொம்ம சந்திராவுடன் இணைக்கும்.
19 .15 கிலோ மீட்டர் மஞ்சள் பாதையில் சோதனை ஓட்டங்களை நடத்த ஆறு பெட்டிகள் கொண்ட முன்மாதிரி ரயில் பயன்படுத்தப்படும்.
இது சீன அரசுக்கு சொந்தமான சி ஆர் ஆர் சி., நான்ஜிங் புசன் கம்பெனி லிமிடெட் இந்த ரயிலை தயாரித்துள்ளது. இது பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு 216 பெட்டிகளை வழங்குவதற்காக 2019ல் ரூ.1578 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
முன்மாதிரி ரயில் இப்போது சுங்க அனுமதிக்குச் செல்லும். இதற்கு ஐந்து நாட்கள் ஆகலாம்‌. அதன்பிறகு தான் சாலை வழியாக பெங்களூருக்கு கொண்டுவரப்பட்டு ஆறு பெட்டிகள் பல ட்ரெய்லர்கள் மூலம் கொண்டு செல்லப்படும்.
இதற்கு இன்னும் மூன்று நான்கு நாட்கள் ஆகலாம்.
இந்த ரயில் பெப்ரவரி 20 அல்லது அதற்கு முன்னதாகவே பெங்களூரை வந்து சேரும் என்றும் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
பெங்களூருக்கு வந்ததும், இந்த ரயில் எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகே உள்ள ஹெப்பக் கோடி டிப்போக்கு கொண்டு செல்லப்படும்.
அங்கு சீன பொறியாளர்கள் மேற்பார்வையில் அதனை அசெம்பிளி (இணைக்கும்) பணிகள் நடக்கும். இதைத் தொடர்ந்து 8 முதல் 10 நிலையில் சோதனைகள், பல டைனமிக் சோதனைகள், மற்றும் மெயின் லைனில் 15 சோதனைகள், மற்றும் ஏழு, எட்டு இடைமுக சோதனைகள், உட்பட 32 வெவ்வேறு சோதனைகள் நடத்தப்படும். மெயின் லைனில் ஆராய்ச்சிக்கு வடிவமைப்பு, தர நிலைகள் அமைப்பின் மேற்பார்வையின் கீழ் அவைகள் சோதனைகளில் உள்ளடங்கும். சோதனை முடிவுகளை ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் தொழில்நுட்ப அனுமதிக்காக ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.முழு செயல்முறை 5 முதல் 6 மாதங்கள் பிடிக்கும். இதற்காக சீனாவில் சேர்ந்த ஐந்து பேர் பெங்களூர் வர விசா பெற்றுள்ளனர். மேலும் பத்து பேருக்கு பிப்ரவரி வார இறுதிக்குள் விசா கிடைக்கும்.
சீனா அதிகாரிகள் இங்கு வந்த பிறகுதான் சீராக இயங்கும். மஞ்சள் லைனில் சிவில் மற்றும் ட்ராக் அமைக்கும் பணி நீண்ட காலமாக நடந்து முடிந்துள்ளது. உரிய பொறியாளர்கள் இல்லாததால், சட்டபூர்வ சோதனை ஓட்டங்களும் தொடங்க இயலவில்லை. இந்த மெட்ரோ ரயில்களுக்கு 208 பெட்டிகள் தயாரிக்கும் பணிக்கு உள்நாட்டில் உரிய நிறுவனத்தை கண்டுபிடிக்க
சி ஆர் ஆர் சி பெரும் முயற்சிகள் ஈடுபட்டது. இறுதியாக மேற்கு வங்க டிட்கர் வேகன்ஸ் லிமிடெட் உடன் இணைந்த, சீனாவுடன் தொடர்பு ஏற்படுத்த தாமதம் ஏற்பட்டது. மே மாத இறுதிக்குள் மேலும் 2 ரயில்களையும் ஒவ்வொரு மாதமும் 2 ரயில்களையும் பி எம் ஆர் சி யில் எதிர்பார்க்கப்படுகிறது.மஞ்சள் பாதைகள் தொடர்பாக தொடங்க எட்டு ரயில்கள் தேவை. 2024 ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில்இது நிகழலாம்ஒவ்வொரு90 நிமிடங்களுக்கும் ஓட்டுநர் இல்லாமல் இந்த ரயில்கள் இயக்க முடியும். இந்த பெட்டிகள் 28 மீட்டர் நீளம் கொண்டது. 32 முதல் 37 டன் எடை அளவு கொண்டதாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.