பெங்களூரில் கடும் குளிர்

பெங்களூர்: நவம்பர். 12 – மாநிலத்தின் தலைநகர் மற்றும் பூங்கா நகர் என்றே புகழ் பெற்றுள்ள பெங்களூரில் இன்று காலை உண்டான கடும் குளிரால் மக்கள் பெரிதும் அவஸ்தைகளுக்குள்ளாயினர். தவிர மாநில வானிலை ஆய்வு மையமும் முன் வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று காலை நகரின் சீதோஷண நிலை நாட்டின் மற்ற அனைத்து முக்கிய நகரங்களை விட மிக குறைவாக வெறும் 20 டிகிரி செல்ஸியஸ் இருந்தது. மாநில பேரிடர் நிர்வகித்து ஆணையத்தின் தகவலின் படி மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்தில் தோராயமாக 13. 9 டிக்ரீ செலஷியஸ் இருந்த நிலையில் மாநிலத்தின் 83 சதவிகித நிலப்பரப்பில் 14 முதல் 18 டிகிரி செல்ஸியஸ் இருந்துள்ளது. மாநிலத்தின் பெலகாவி , சிக்கமகளூர் , பிதர் , விஜயபுரா , சிக்கபள்ளாபுரா , பாகல்கோட்டே , ஹாசன் , துமகூரு , கலபுரகி , உத்தரகன்னடா , தார்வாட் , கொப்பலா , குடகு , மற்றும் சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் சீதோஷ்ன நிலை இன்று காலை 12 முதல் 14 டிகிரி செல்ஸியஸ் என பதிவாகியுள்ளது. இதே வேளையில் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் 34.5 டிகிரி பதிவாகியுள்ளது. நகரின் மழைநீர் கால்வாய்களில் நீரின் மட்டம் 18.69 சதவிகிதமாக இருந்த அதே வேளையில் நகரின் 68 வார்டுகளில் மழை பெய்துள்ளது. பெங்களூரின் வார்டுகளில் உஷ்ண நிலை 19.24 முதல் 19.88 டிகிரீயாக இருந்துள்ளது. நாளை நகரின் மேற்கு பகுதிகளில் சாதாரண மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை நகரின் சீதோஷ்ண நிலை 20.3 டிகிரீயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.