பெங்களூரில் கடும் மூடுபனி – 34 விமானங்கள் தாமதம்

பெங்களூரு, ஜன.14-
பெங்களூரில் வரலாறு காணாத அளவில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை சுற்றி பனிமூட்டம் காரணமாக விமானம் செல்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களை இயக்க முடியவில்லை. இரண்டு மணி மூன்று மணி நேரம் தாமதமாக விமானங்கள் இயக்கப்பட்டது இதனால் பயணிகள் பொறுமை இழந்தனர் விமானத்திற்குள் அமர்ந்து அவதிப்பட்டனர்.
34 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெரியாததால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது இதனால், பயணிகள் விமானங்களில் அமர்ந்து, பலமணி நேரத்துக்கு பின், விமானங்கள் புறப்பட தயாராகின. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் அதிகாலையில் இந்தப் பிரச்சனை தலைக்கு வரும்.விமானங்கள் தாமதமாக வருவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்சனை குளிர்காலம் முடியும் வரை குறைந்தது மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்.