பெங்களூரில் கடும் வாகன நெரிசல்

பெங்களூர் ஆக 17-
மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் ,
பி .எம். டி. சி. பஸ் 30 கிலோ மீட்டர் தூரத்தை சென்றடைய 2 மணி நேரம் பிடிக்கின்றது. என தெரிய வந்துள்ளது. பெங்களூர் சில்க் போர்டு முதல் ஹெப்பால் வரையில் வெளிவட்டச் சாலை பகுதியில், ரயில்வே பணிகள் நடந்து வருகிறது.இதனால் தொடர்ந்து வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது இது குறித்து பி.எம்.டி.சி., பஸ் எண் 500 டிரைவர் ஒருவர் கூறுகையில், இந்த வழித்தடங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்து வருவதால், 30 கிலோமீட்டர் தூரத்தை கடக்க பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
நாகவாரா – ஹெப்பால் இடையே வாகன போக்குவரத்துகள் 30 நிமிடம் ஒரு இடத்தை விட்டு கடக்க நேரம் பிடிக்கிறது. இது வீரப்பன பால்யா, ஹெப்பால் வரையில் ரெண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாதிப்பு இருக்கிறது.
மற்றொரு போக்குவரத்து டிரைவர் கூறுகையில், மெட்ரோ ரயில்வே திட்டப் பணிகள் வழியை நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகிறது.

இந்த பணிகளின் இருபுறமும் வாகனங்கள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாகரபாவியில் இருந்து கஸ்தூரி நகர் வழி செல்லுகிற வாகனங்கள் மேம்பாலம் வழியே தான் செல்ல வேண்டும்.

இதனால் இப்பகுதியில் நெரிசலை தவிர்க்க முடியவில்லை.
மெட்ரோ ரயில் திட்டம் 55 கிலோமீட்டர் நீள லைன் சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து சர்வதேச விமான நிலையம் வழியாக ஹெப்பால் செல்ல வேண்டும் இதன் முதற்கட்ட பணி கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

அண்மையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உடன் வி எம் ஆர் சி எல் வி எம் டி சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இவ்வழியே பி எம் டி சி பஸ்கள் 2,179 ட்ரிப்பிள் சிரமத்துக்கு இடையே வாகனங்கள் இயக்கப்படுகிறது.