பெங்களூரில் கட்டுப்பாட்டை இழந்து ஓடி கவிழ்ந்த பஸ்

பெங்களூர் : ஆகஸ்ட் . 29 – ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பி எம் டி சி வோல்வோ பேரூந்து கவிழ்ந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக அனைத்து பயணியரும் உயிராபத்திலிருந்து தப்பியுள்ள சம்பவம் பேலஸ் குட்டஹள்ளி மேம்பாலம் அருகில் நடந்துள்ளது.
சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹெச் எஸ் ஆர் லே அவுட் மார்கமாக பி எம் டி சி வோல்வோ பேரூந்து சென்றுகொண்டிருந்தபோது வழியில் பேலஸ் குட்டஹள்ளி மேம்பாலத்தில் ஏறும் போது பேரூந்து உருண்டு விழுந்துள்ளது. ஓட்டுனருக்கு தலை சுற்று வந்த காரணத்தால் பெற்ரோந்து கட்டுப்பாடு இழந்துள்ளது. இந்த நிலையில் பேரூந்தை சாலை ஓரத்தில் நிறுத்துவதற்குள்ளாக கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தின் போது ஓட்டுநர் நடத்துனர் உட்பட பேரூந்தில் 13 பேர் இருந்ததுடன் அனைவரும் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனர் . இந்த விபத்தால் நேற்று நள்ளிரவு வரை பேலஸ் வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டதுடன் பின்னர் சதாசிவ நகர் போக்குவரத்து போலீசார் கவிழ்ந்து விழுந்திருந்த பேரூந்தை அப்புறப்படுத்திய பின்னர் வாகன போக்குவரத்து சகஜமாகியது.