பெங்களூரில் கனமழை பெய்யும்

பெங்களூர், டிச.6-பெங்களூரில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பெங்களூரில் ஓரிரு நாட்களுக்கு குளிரான வானிலையே நிலவும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சூறாவளியின் தாக்கத்தால் மாநிலத்தின் பல பகுதிகளில் குளிர்ந்த வானிலை நிலவும். டிசம்பர் ஒன்பது வரை வெப்பமான கால நிலையை பராமரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் 7 முதல் 9 வரை தெற்கு பகுதிகளில் மழை பெய்யும். பீதர், கல்புருர்கி, யாத்கிரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை லேசான மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 9 வரை தென் கன்னடா, உடுப்பியில் மழை பெய்யும். தமிழகத்தில் மழை கொட்டி தீர்த்தது. மிக்ஜாம் புயல் பெங்களூரையும் கொஞ்சம் கொஞ்சமாக பாதித்தது. மாநில தலைநகர் பெங்களூரில் சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய வானிலையே நிலவி வருகிறது.