பெங்களூரில் கனமழை – மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூர், அக். 11-
பெங்களூரில் இன்றும் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
பெங்களூர் நகரம், பெங்களூர் கிராமம், குடகு மாவட்டம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் உள் மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் உட்பட தெற்கு மாவட்டங்களான ஹாசன், மைசூர், சாம்ராஜ்நகர், கோலார், உட்பட பல பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல, பெங்களூருக்கும் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை பெய்யாமல் போயிருந்தால், ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும். மொத்தத்தில் நல்ல மழை பெய்தால் சிறிது வறட்சி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.