பெங்களூரில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பெங்களுரு, அக். 6: பெங்களூரில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. பெங்களூரில் மட்டுமின்றி மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக எச்சரித்துள்ளது.
பெங்களூரில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், பெங்களூரில் மாலை அல்லது இரவில் லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பெங்களூரில் அடுத்த 24 மணி நேரத்தில் மாலை அல்லது இரவு அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 மற்றும் 21 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும்,
மேலும், மாநிலத்தின் சில மாவட்டங்களில் அக்டோபர் 15-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும். எனவே சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும் என தெரிகிறது.
மாநிலத்தில் பெய்யத் தொடங்கி உள்ள பருவமழை, தொடர்ந்து 3 மாதங்களுக்கு பெய்யும் என தெரிகிறது. மாநிலத்தில் மழைக்காக மக்கள் காத்திருக்கின்றனர். செப்டம்பரில் நல்ல மழை பெய்தது. அக்டோபரில் நல்ல மழை பெய்யும் என மாநில மக்கள் எதிர்பார்க்கின்றனர்.