பெங்களூரில் காங்கிரஸ் கொந்தளிப்பு

பெங்களூர்: ஜூன். 16 –
பெங்களூரில் இன்று கவர்னர் மாளிகை நோக்கி வந்த காங்கிரஸ் கட்சியின் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர் சித்தராமையாவை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர் மற்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகை நோக்கி வந்த பேரணியை இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்க்கிளில் போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் பதட்டம் பரபரப்பு ஏற்பட்டது சித்தராமையாவை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தியுள்ள செயலை கண்டித்து காங்கிரஸ் இன்று நகரில் ராஜபவன் சலோ போராட்டத்தை நடத்தி மத்திய அரசுக்கு எதிராக போரில் இறங்கியது . நேஷனல் ஹரால்டு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியை கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்தி இருப்பதுடன் மீண்டும் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அளித்திருப்பது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என காங்கிரசார் குற்றஞ்சாட்டியிருப்பதுடன் இன்று காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து ராஜபவனுக்கு மாபெரும் பாதயாத்திரை மேற்கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நகரின் குயின்ஸ் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று காலை முதலே சேரா தொடங்கிய ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் அங்கிருந்து ராஜபவனை நோக்கி சென்றதுடன் இவர்களை வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். கே பி சி சி தலைவர் டி கே சிவகுமார் , தலைமையில் புறப்பட்ட ராஜபவன் சலோ பேரணியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா , மற்றும் மேலவை எதிர்க்கட்சி தலைவர் பி கே ஹரிப்ரசாத் , செயல் தலைவர்களான ராமலிங்க ரெட்டி , சலீம் அஹ்மத் , த்ருவநாராயணா , ஈஸ்வர் கண்ட்ரே , கே பி சி சி தேர்தல் பிரசார குழு தலைவர் எம் பி பாட்டில் , மற்றும் பல மூத்த பிரமுகர்கள் இதில் பங்கு கொண்டனர் . நகரம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்த போராட்ட பேரணியில் கலந்து கொண்டதுடன் மாநில அரசு மற்றும் மத்திய பி ஜே பி அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த பாதயாத்திரை புறப்படும் முன்னர் காங்கிரஸ் அலுவலகம் அருகில் செய்தியாளர்களிடம் பேசிய கே பி சி சி தலைவர் டி கே சிவகுமார் நியாயமான முறையில் நடத்தப்படும் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது என குற்றஞ்சாட்டினார்.