பெங்களூரில் காணாமல் போன சிறுவன் ஐதராபாத்தில் மீட்பு

பெங்களூரு, ஜனவரி 24- கடந்த 3 நாட்களுக்கு பெங்களூர் ஒயிட் பீல்டு பகுதியில் காணாமல் போன 12 வயது சிறுவன் பரினவ் வழக்கு இறுதியில் மகிழ்ச்சியான முடிவுக்கு வந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள நம்பல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சிறுவனை கண்டுபிடித்த போலீசார் பாதுகாப்பாக பெங்களூருக்கு அழைத்து வருகின்றனர்
கடந்த ஜனவரி 21ஆம் தேதி ஒயிட் ஃபீல்டில் பயிற்சி முடித்து திரும்பியபோது பரினவ் காணாமல் போனார். மாரத்தஹள்ளி, யமலூர், மெஜஸ்டிக் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களில் அவரது நடமாட்டம் கண்டறியப்பட்டது.
சிறுவனிடம் கொஞ்சம் பணம் மட்டுமே இருந்தது, ஆனால் அவன் எப்படி ஹைதராபாத்தை சென்றான் என்பது இன்னும் தெரியவில்லை. பெற்றோர்கள் சிறுவனிடம் பேசி அவனை அழைத்து செல்ல உள்ளனர்.
இது குறித்து சிறுவன் பரினவின் தாய் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார், எங்கள் மகன் ஹைதராபாத்தில் உள்ள நம்பல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பாக இருக்கிறார். மகனை அழைத்து வர குடும்பத்தினர் ஹைதராபாத் சென்றுள்ளனர். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்
ஜனவரி 21ம் சிறுவன் தேதி டியூஷனுக்காக சென்றான் ஆனால் டியூஷன் முடிந்து மகனை அழைத்து வர சற்று தாமதமானது பிறகு வந்து பார்த்தபோது அவரை காணவில்லை. மஞ்சள் நிற டி-சர்ட் மற்றும் நீல நிற பேன்ட் அணிந்திருந்த சிறுவன் பள்ளி பையில் ஆலன் என்று எழுதி இருந்தான்
காணாமல் போன மாணவரின் தந்தை சுகேஷ், ஒயிட்பீல்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியளவில் குண்டலஹள்ளி கேட் மற்றும் மாரத்தஹள்ளி பாலம் அருகே உள்ள காவேரி தனியார் மருத்துவமனை அருகே பிரணவ் இருப்பது சிசிடிவி காட்சிகளில் தெரிந்தது. சிறிது நேரம் கழித்து அவன் பேருந்தில் ஏறினான். கடைசியாக மாலை 4.30 மணியளவில் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் காணப்பட்டார். என்பது குறிப்பிடத்தக்கது