பெங்களூரில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு

பெங்களூரு, மே 31:
சமீபத்தில் பெய்த மழைகளால் கீரை காய்கறி பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதன் விளைவாக ஏற்கெனவே விலைஉயிர்ந்திருந்த பீன்ஸ் மேலும் விலை உயர்ந்து இப்போது கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் கொத்துமல்லி ஒரு கட்டு 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது . மழை காரணமாக கீரையின் விலைகளும் உயர்ந்துள்ளன. அதிலும் நாட்டி கொத்துமல்லி விலை சற்றே குறைந்துள்ளது . தடியான ஒரு கட்டு நாட்டி கொத்துமல்லி 60 முதல் 70 ரூபாயில் உள்ளது. சோழி கீரை மற்றும் விந்திய கீர் கட்டு 50 ரூபாயாக உள்ளது. இதே போல் பாலாக் கீரையும் விலை ஏறி உள்ளது இன்னும் சில நாட்களுக்கு விலைகள் இப்படித்தான் இருக்கும் என கே ஆர் மார்க்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.வெய்யிலின் கொடுமையால் விண்ணைமுட்டியிருந்த காய்கறி விலைகள் சில நாட்களாக பெய்த மழையால் மேலும் வெளியேற்றம் அடைந்துள்ளது. பீன்ஸ் , பட்டாணி , பாகற்காய் ஆகியவை விலை உயர்ந்துள்ளன. தவிர இஞ்சி , பூண்டின் விலைகளும் அதிக விலை ஏற்றம் கண்டுள்ளன. மழை குறைபாடால் காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதனால் மார்க்கெட்டின் தேவைக்கேற்ப காய்கறிகள் கிடைத்து வரவில்லை. காய்கறிகள் மற்றும் கீரைகள் விலை ஏற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம் காய்கறி விலைகளை கேட்ட மாத்திரத்தில் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்கவே தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதேபோல் குடைமிளகாய் பீர்கங்கா , ஆகியவை கிலோ 70 பச்சைமிளகாய் 120 ருபாய் , பட்டாணி 160 ரூபாய் உருளைக்கிழங்கு 30 ரூபாய் தக்காளி 30 ரூபாய் வெங்காயம் 30 ரூபாய் முட்டைகோஸ் 60 ரூபாய் கத்தரிக்காய் 50 ரூபாய் என உள்ளது. ரூபாயும் , கேரட் 60 ருபாய் , வெண்டைக்காய் 60 ருபாய் ,காலிபிளவர் 60ரூபாய் , பீட்ரூட் 40 ருபாய் கீரைக்காய் 40 றொ௦பாய் முள்ளங்கி 50 ரூபாய் பாகற்காய் 100 ரூபாய் பூண்டு 220 ருபாய் இஞ்சி 180 ரூபாய் , வெந்திய மற்றும் சோழி கீரைகள் கட்டு 50 ருபாய் புதினா 20 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. மழைக்காலத்தில் கீரைகள் அழுகி [போகின்றன. அதனால் ஒவ்வொரு மழை காலத்திலும் அவற்றின் விலை ஏறிவிடும் வழக்கமான முறையில் காய்கறி கீரைகள் மார்க்கெட்டுக்கு வர இன்னும் இரண்டு மீண்டு வாரங்கள் பிடிக்கும் அதுவரை விலைகள் இப்படித்தான் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.