பெங்களூரில் குடிநீர் பிரச்சனை தீர்க்க தீவிர நடவடிக்கை

பெங்களூர் : ஏப்ரல். 3 – பெங்களூரின் குடிநீர் பிரச்சைகளை தீர்க்க குடிநீர் வாரியம் பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்துவருகிறது. இதை பயன்படுத்தி மாநில அரசு கோடை காலத்திற்கு பின்னர் மீண்டும் தங்கள் பழைய முறையையே கையாளக்கூடும் என தெரிகிறது. ஏனெனில் குடிநீர் தொடர்பான பல கோப்புகள் பல ஆண்டுகலாக வெறும் கோப்புகள் அளவில் உள்ளன .இது குறித்து நீர் வளத்துறை மற்றும் பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில் கர்நாடக மாநில குடிநீர் கொள்கை 2022 ன்படி போர்வெல்கள் தோண்டுவது , சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது ஆகிய சட்டங்கள் மேலும் தொடரும் . இவை நகரின் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க உருவாக்கப்பட்ட சட்டங்களாகும். இந்த கொள்கை முறைகளை நடைமுறைப்படுத்த பல்வேறு துறைகளுடன் கூட்டாக செயல்பட்டு வருகிறோம். ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த விதிமுறைகள் அனைத்தையும் முழுதாக நடைமுறை படுத்த முடிய வில்லை. 2022 ன் மாநில தண்ணீர் கொள்கை என்பது புதியது. இது குறித்த பல நியமங்கள் கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. உதாரணத்திற்கு கடந்த 2012 நவம்பர் மாதத்தில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் அளித்த அறிக்கையின்படி பெங்களூரு மாவட்டத்தில் நிலத்தடி நீர் மிகவும் சீரழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது. இந்த அறிக்கை வந்த பின்னர் மத்திய நிலத்தடி நீர் வாரியமும் தாங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் வர்த்தக காரணத்திற்க்காக போர்வெல்கள் தோண்டக்கூடாது என தெரிவித்திருந்தது. குடிநீருக்கு கடும் பிரச்சனை இருக்கும் பகுதிகல் மட்டும் அரசு குடிநீர் விநியோகம் இல்லாத பகுதிகளில் மட்டுமே போர்வெல்கள் தோண்ட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நகரில் முறையற்ற விதத்தில் பழங்களில் போர்வெல்கள் தோண்டப்பட்டுள்ளன . இதே போல் கடந்த 2019ல் கர்நாடக மாநில நிலத்தடி நீர் வாரியம் சிறப்பு கமிட்டியை அமைத்து அந்த குழு கட்டுமான பணிகளுக்கு போர்வெல் தண்ணீரை பயன்படுத்திடுவதற்கு தடை விதித்திருந்தது. ஆனாலும் நகரில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நிலையில் கடந்த மாதம் வரை கூட பல கட்டுமான இடங்களில் போர்வெல்கள் தோண்டும்பணி நடந்துள்ளது. இதற்க்கு மக்களின் மனநிலைகள் மாறியாக வேண்டியது முக்கியம். இதற்க்கு இதுதான் சரியான தருணம். இப்போது குடிநீர் இல்லாமல் தத்தளித்து வரும் மக்களுக்கு இப்போதாவது தங்கள் தவறுகள் தெரிந்திருக்கின்ற நிலையில் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள முயற்சித்து வருகிறார்கள். ஆனாலும் குடிக்கும் நீரை விலைகள் பேசி கொடுக்கும் கூட்டம் இங்கே இருக்கும் காசை தண்ணீர் போல இறைக்கும் கூட்டம் அங்கே என்று ஏழை க்காரர்களுக்கிடையேயேயான வித்யாசத்தை இரண்டே வரிகளில் வாலி எழுதி அதை ப்ருட்சித்தலைவர் பாடிய பாடல் இன்னமும் நினைவில் உள்ளது. பணக்காரர்களுக்கிடையேயேயான வித்யாசத்தை இரண்டே வரிகளில் வாலி எழுதி அதை ப்ருட்சித்தலைவர் பாடிய பாடல் இன்னமும் நினைவில் உள்ளது.