பெங்களூரில் குடுகுடுப்பைக்காரர்கள் போராட்டம் – கலெக்டரிடம் மனு

பெங்களூர், ஜன. 3-
பெங்களூரில் குடுகுடுப்பைக்காரர்கள் சமூகத்தினர் தங்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்த கோரி கர்நாடக மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெங்களூர் சர்வக்ஞ நகர் தொகுதி எச்பிஆர் லேஅவுட்டில் சர்வே எண் 153ல் அரசால் அதிகரிக்கப்பட்ட நான்கு குடிசை பகுதிகள் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் உள்ள குடுகுடுப்பைக்காரர்கள் உள்ளிட்டோர் வசிக்கும் குடிசை பகுதி தீவைத்து எரிக்கப்பட்டது. வீடு இல்லாமல் நடுத்தெருவில் நின்ற இந்த மக்களுக்கு வேறு இடத்தில் வீட்டு வசதி ஏற்படுத்தித் தருவதாக அரசு கூறியது. ஆனால் எந்த இடத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டதோ அதே இடத்தில் வீடுகள் கட்டி தர வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டத. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே இடத்தில் வீடுகள் கட்டித் தர கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த ஏழை எளிய மக்களுக்கு அதே இடத்தில் வீடு கட்டி தர முடியாது என்று அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. எந்த நிலையில் தீ வைத்து எரிக்கப்பட்ட அதே இடத்தில் சின்ன சின்ன குடிசைகள் அமைத்து குடுகுடுப்பைக்காரர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 28 12 2022 அன்று பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் ஜேசிபி எந்திரங்கள் கொண்டு வந்து இந்த இடத்தில் இருந்த 60க்கும் மேற்பட்ட குடிசைகளை தரைமட்டமாக்கி உள்ளனர்.
தற்போது வீடுகள் இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்துள்ள இந்த குடுகுடுப்பை காரர்கள் கர்நாடக மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் வி மூர்த்தி டி ராஜ்குமார் கோவிந்தா சாந்தகுமார் அருண்குமார் சுரேஷ் டேவிட் வள்ளுவர் புரம் வடிவேலு தலைமையில் போராட்டம் ஆர்ப்பாட்டம் தர்ணா நடத்தினர். காடு கொண்டனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
பெங்களூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கலெக்டர் தயானந்த் அவர்களை சந்தித்து குடிசைகளை அகற்றிய மாநகராட்சி மீது மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடக மாநில குடிசை மாற்று வாரிய ஆணையர் மஞ்சுநாத் அவர்களையும் சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்