பெங்களூரில் குளிர் மழை மக்கள் மகிழ்ச்சி

பெங்களூரு, மே 3-
பெங்களூரில் கோடை வெயில் வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு இன்று பிற்பகல் தற்காலிக நிவாரணம் கிடைத்தது.வானம் இருண்டு கரு மேகங்கள் திரண்டன.திடீரென குளிர் காற்று வீசியது கனமழை பெய்தது.சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது
இதனால் தண்ணீரின்றி தவித்த பெங்களூரு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


ஜெயநகர், ஜே.பி.நகர், மெஜஸ்டிக், ராஜாஜிநகர், ரேஸ் கோர்ஸ், கோரமங்களா, ரிச்மண்ட் சர்க்கிள், கப்பன் பார்க், விதான சவுதா, சாந்திநகர், கே.ஆர்.புரம், பீன்யா, தாசரஹள்ளி, பாகல்குண்டே, ஷெட்டிஹள்ளி, மல்லசந்திரா உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
மறுபுறம் மிதமான மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில், பாதாள சாக்கடைகளில் தண்ணீர் நிரம்பி, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
இவ்வளவு கால அவகாசம் கிடைத்தும் பிரச்னையை சரி செய்ய முன்வராத பிபிஎம்பி அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அடுத்த வாரம் வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, உடுப்பி, தும்கூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த வாரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. பெங்களூரு குடிநீர் வினியோகம் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மக்களின் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது