
பெங்களூர், செப்.11- பெங்களூரில் தனியார் வாகனங்களின் கூட்டமைப்பு சங்கம் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனை சமாளிக்க பெங்களூரில் கூடுதல் பஸ்களை இயக்கி வருகின்றது.
பெங்களூர் விமான நிலைய வழித்தடங்களில் 100 கூடுதல் பஸ்களை இயக்குவதுடன் கூடுதலாக 500 பஸ்களை அனுப்புவதாக பி.எம்.டி.சி நிறுவனம் அறிவித்துள்ளது .
ஆட்டோ மற்றும் கேப்ஸ் வாகனம் தனியார் போக்குவரத்து ஓட்டுநர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பி. எம். டி. சி., மற்றும் ‘நம்ம மெட்ரோ’ ஆகிய நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப, அவைகளை அதிகப்படுத்தி இயக்கியது
பி.எம்.டி.சி. நிறுவனம் 5, 601 பஸ்களை இயக்கி வருகிறது. அதனை 57, ஆயிரத்து 450 டிரிப்புகளாக இயக்க முன் வந்துள்ளது.
விமான நிலைய வழித்தடத்தில் மட்டும் 140 வாய்வு வஜிரா பஸ்கள் மூலம் 950 ட்ரிப்புகள் இயக்க ப்பட்டது.
மெஜஸ்டிக், கே.ஆர். மார்க்கெட், சிவாஜி நகர் ஆகிய பஸ் நிலையங்
களில் இருந்து,
காடுகோடி, சர்ஜாபூர் அத்திபெலே, ஆனேக்கல், பன்னார் கட்டா, ஜிகினி ஹாரேஹள்ளி பிடதி தாவரக்கெரே,, நெலமங்கலா, ஹெசரகட்டா, தொட்டபல்லாப்பூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்கினர்.
இது குறித்து பி எம் ஆர் சி எல் இயக்குனர் ஏ.எஸ் ஷங்கர் கூறுகையில்,
காலை 8 மணி முதல் 10:30 வரை பீக் ஹவர் இதனை 11: 30 வரை நீடிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும்.
நெரிசல் இல்லாத நேரத்தில் கூட்டம் கூட்டத்தை பொறுத்து ஆறு அல்லது எட்டு நிமிடங்களாக அதிகரிக்கப்படும்.
குறிப்பாக மாலை 5 மணி முதல் 8 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என்றார்.
தனியார் போக்குவரத்து சங்க தலைவர் நாராயணசாமி கூறுகையில், எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்து விட்டது. அதனால் எங்களின் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தினோம்.என்றார்.இவர்களின் 32 கோரிக்கைகளில் பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதும் ஒன்று.
ஆகஸ்ட் 10 முதல்வர் உடன் பேச்சுவார்த்தை நடந்தபோது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார் ஒரு வார கால அவகாசம் கேட்டனர் ஆனால் இது தோல்வி அடைந்துள்ளது எனவே வேலை நிறுத்த அடையாளமாக சிட்டி ரயில் நிலையம் முதல் சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.தனியார் நிறுவன போக்குவரத்து சங்கத்தினரின் ஸ்டிரைக் குறித்து கர்நாடக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில்,இவர்களின் கோரிக்கை களை ஒவ்வொன்றாக தான் நிறைவேற்ற முடியும். இதற்கு தேவையான நிதி தேவை.சக்தி திட்டம் மற்றும் வாழ்நாள் வரி மீதான கோரிக்கைகளை நிறைவேற்ற கனிசமான நிதி உதவி தேவை. சக்தி திட்டத்தின் மூலம் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட ஆட்டோ கேப் ஓட்டுநர்களுக்கு மாதம் தோறும் பத்தாயிரம் நிதி உதவி வழங்கினால், ஆண்டுக்கு 4370 .28 கோடியை அரசு செலவிட வேண்டி இருக்கும்.தனியார் பேருந்து நடத்தினர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும். அது என் கையில் இல்லை. முதல்வர் முடிவெடுக்க வேண்டும்.சரக்கு வாகனங்களுக்காக வாழ்நாள் வரியை செலுத்துவதற்கு அரசு கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது பை டாக்ஸி மற்றும் சவாரி நிறுவனங்கள் கோரிக்கை நிறைவேற்ற நீதிமன்றத்தின் தலையீடு தேவை என்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை விவாதிக்க கலந்து கொள்ள தவறி உள்ளனர் என்றும் அவர் கூறினார்.