பெங்களூரில் கூடுதல் சிசிடிவி

பெங்களூர், மார்ச் 9-
நாட்டில் உள்ள பெரிய நகரங்களில், பெங்களூரில் அதிக அளவு சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் தற்போது 1,640 இடங்களில் 4,100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் அதிகப்படுத்தி, 7500 சிசிடிவி கேமராக்களை நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கேமராக்கள் 8 டிசிபி அலுவலகங்களிலும், 96 போலீஸ் நிலையங்களிலும், பதிவாகும். இது மட்டுமின்றி 30 பாதுகாப்பு தீவுகள் என்ற ‘சேஃப்டி ஐலேண்ட்’ ஏற்படுத்தி, அதற்கான ஆபரேஷன் பணிகளும் நடத்தப்படும். பெங்களூரில் 8 டிரோன் கேமராக்கள்,
409 பாடி வோர்ன் கேமராக்கள், ஆகியவைகளும் செயல்படுத்தப்படும். இவை யாவும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.
விபத்துக்கள் நேரிடும் போது கண்காணிக்க பவுரிங், வாணி விலாஸ், விக்டோரியா, கே. சி. ஜெனரல், எலஹங்கா உட்பட எட்டு மருத்துவ மனைகளிலும் இந்த சிசிடிவி கேமரா புட்டேஜ் பயன்படும். இவ்வாறு முதல்வர் வசூல் தெரிவித்துள்ளார்.