பெங்களூரில் கைதான தீவிரவாதி பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூர்: ஜூலை. 26 – ஹிந்துக்கள் நம்மை சரியாக நடத்துவது இல்லை. இதனால் நமக்கு நிம்மதி கெட்டிருப்பதால் தீவிரவாத கும்பலுடன் சேர விரும்பினேன் என திலக் நகரில் நேற்று முன்தினம் கைதாகியுள்ள அல் கொய்தா சந்தேகத்திற்குரிய தீவிரவாதி அக்தர் ஹுசேன் அதிர்ச்சியான தகவல்களை வாய் விடுத்துள்ளான் . சி சி பி போலிஸாரின் முதல் கட்ட விசாரணையின் போது ஹுசேன் மொபைல்களில் 20 ஜி பி அளவிற்கு டாட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவன் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து சாட் மற்றும் போஸ்டுகளை அனுப்பியுள்ள விஷயமும் தெரியவந்துள்ளது. முஸ்லீம் சமுதாயத்தினர் மீது இந்தியாவில் நிரந்தர கொடுமைகள் நடந்து வருகிறது.எனவும் ஹுசேன் போஸ்ட் செய்துள்ளான். அது மட்டுமின்றி காஷ்மீரை சேர்ந்த அஸாதி மற்றும் நாடு முழுக்க ஷரியத் சட்டம் (முஸ்லீம்களின் தனிப்பட்ட சட்டங்கள் ) நடைமுறையாக வேண்டும் என்று தொடர்ந்து போஸ்ட் செய்து வந்துள்ளான். இந்த போஸ்ட்களால் அவனுக்கு சமூக வலைதளங்களில் தீவிரமாய் ஈடுபட்டுவந்த அல் கொய்தா இயக்கத்தினரின் முக்கிய பிரமுகர்களின் தொடர்புகள் கிடைத்துள்ளது. பின்னர் இவனுக்கு ஜிஹாதி குறித்த போதித்துள்ள அல் கொய்தா இயக்கத்தின் அதிகாரபூர்வ சமூக வலை தளத்தின் உறுப்பினர்கள் , இந்தியாவில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு கொடுமைகள் நடப்பதாக இவனை தலை கெடுத்துள்ளனர். தீவிரவாத இயக்கத்தின் தொடர்பு கிடைத்த பின்னர் சமூக வலைதளங்களில் காஷ்மீர் குறித்து மேலும் அதிகளவில் போஸ்டுகள் அனுப்பிவந்துள்ளான். மொபைல்களை இந்த குற்றங்களுக்கு பயன் படுத்தியதுடன் பெங்களூரின் அங்குலம் அங்குலத்திற்கும் தகவல்களை மொபைல்களில் வைத்திருந்துள்ளான் . டெலிவரி பணி செய்து வந்ததால் நகரின் பெரும்பாலான இடங்களை நேரில் பார்த்துதான். அவற்றின் வரை படங்களையும் தயாரித்து எங்கெங்கு தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் , என்பதன் ப்ளூ பிரிண்ட்களை காஷ்மீருக்கு அனுப்பி வைத்தது குறித்து விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது அந்த மொபைல்களை ரிட்ரீட் செய்ய தடவியல் சோதனை கூடத்திற்கு (எப் எஸ் எல் ) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சந்தேகத்துக்குரிய தீவிரவாதி ஹுசேன் வேலைக்காக 2015ல் பெங்களூருக்கு வந்து முதலில் கனகபுரா வீதியில் மர்யாஸ் என்ற நிறுவனத்தில் வேலையில் சேர சென்ற போது இவனுக்கு வெறும் 17 வயது என்பதால் வேலை கிடைக்க வில்லை. பின்னர் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான் . அங்கு உடல் நலம் பாதிப்புக்குள்ளாகி வேலையை விட்டு விட்டான் . பின்னர் கார்மெண்ட் ஒன்றில் மூன்று மாதங்கள் வேலை செய்து அங்கு தேர்வு அட்டையை கேட்டனர் என்ற காரணத்திற்க்காக பி யு சி படிக்க மீண்டும் அஸ்ஸாமிற்கு சென்று 2017 நவம்பரில் மீண்டும் நகருக்கு வந்துள்ளான். கார்மெட்ன் , செக்யூரிட்டி இப்படி பல்வேறு இடங்களில் வேலை செய்து விட்டு சில மாதங்களுக்கு முன்னர் அவனுடைய தாய் இறந்து போனதால் அஸ்ஸாமிற்கு சென்று மீண்டும் நகருக்கு வந்து உணவு டெலிவரி பணியில் சேர்ந்தான் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது இரவு நேரங்களில் பல்வேறு தீவிரவாத இயக்கத்தவரின் தலைவர்களின் உரைகளை கேட்க துவங்கினான். இந்த உரைகளால் கவரப்பட்டு தீவிரவாத இயக்கத்தில் சேர முடிவு செய்தான் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தன் சமுதாயத்தினர் அவமதிப்புக்கு ஆளாகிறார்கள் என கூறியபடி இந்த தர்ம யுத்தத்தில் பங்கு கொள்ளுமாறு இளைஞர்களை உசுப்பி விட்டுள்ளான். தீவிர வாத இயக்கங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த அக்தர் இந்தாண்டு ஆப்கானிதனுக்கு செல்ல தயாராகி வந்துள்ளான் என்றும் தெரிய வந்துள்ளது. தர்மத்தை காக்க ஜிஹாத் போர் நடத்த வேண்டும். இதன் வாயிலாக தன் இனம் அவமதிக்கப்படுவதிலிருந்து விலக்கப்பட வேண்டும்.என சமூக வலைதள கும்பல் உறுப்பினர்களுக்கு குற்றவாளி அழைப்பு விடுதிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவன் இன்றுவரை எவ்வித இயக்கங்களிலும் சேர்ந்ததாக தெரியவில்லை . அனால் இயக்கங்களில் சேர்வதற்கு பெருமளவு உற்சாகத்துடன் இருந்துள்ளான். இதன்படி கொல்கத்தாவை சேர்ந்த ஒருவன் , வங்காள தேசத்தை சேர்ந்த இரண்டு பேர் மற்றும் தானும் சேர்ந்து மொத்தம் நான்கு பேர் ஆப்கானிஸ்த்தானுக்கு செல்ல திட்டம் தீட்டி வந்தனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது .