பெங்களூரில் கொரோனா சுனாமி

பெங்களூரு, ஜன. 14 – பெங்களூர் நகரில் கொரோனா தொற்று பரவல் சுனாமி போது படு வேகத்தில் பரவிவருகிறது இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பெங்களூரில் செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மாநில தலைநகர் பெங்களுருவில் கடந்த சில மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக கொரோனா தோற்று பரவல் 20 ஆயிரங்களை தாண்டியிப்பிருப்பது பெரும் கவலை தரும் தகவலை உள்ளது . கொரோனா மூன்றாவது அலை தற்போது பெங்களுருவில் துவங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் இந்த தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேஉள்ளது. மாநகராட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி வெள்ளிக்கிழமை பொம்மனஹள்ளி பிரிவில் 2232 , தசரஹள்ளி பிரிவில் 493 , கிழக்கு பிரிவில் 3126 , மஹாதேவபுராவில் 2343 , மற்றும் ஆர் ஆர் நகரில் 1528, தெற்கு பிரிவில் 3172 மற்றும் மேற்கு பிரிவில் 2454 மற்றும் எலஹங்காவில் 1412 அநேகல்லில் 921 , பெங்களூரு புறப்பகுதியில் 1360 உட்பட மொத்தம் 20121 பேருக்கு கொரோனா தோற்று பாதித்துள்ளது. தவிர கடந்த 24 மணிநேரத்தில் 18374 பேருக்கு இந்த கொரோனா புதிய தொற்று பாதித்துள்ளது. இந்த தொற்றால் 3 பேர் இறந்திருப்பதுடன் மொத்தம் 1246001 பேர் இதிலிருந்து குணமடைந்துள்ளனர். நகரில் இதுவரை 1353331 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் மொத்தம் 16436 பேர் இறந்துள்ளனர். தவிர பெங்களூரு சர்வ தேச விமானநிலையத்திற்கு நேற்று வந்தியங்கிய வெளி நாட்டு பயனியரில் 5 பேருக்கு சிறிது உறுதியாகியுள்ளது. கனடாவை சேர்ந்த இருவர் , யு எஸ்ஸின் ஒருவர் மற்றும் யு கே வைசேர்ந்த ஒருவர் மற்றும் ரோம் நகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் நாளுக்குநாள் தொற்று அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பரவலை தடுக்கவும் தற்போது உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.