பெங்களூரில் சட்ட விரோதமாக தோண்டப்படும் போர்வெல்கள்

பெங்களூர், ஏப். 13-
பெங்களூர் இந்திரா நகரில் சட்ட விரோதமாக தினமும் மூன்று நான்கு போர்வைகள் தோண்டப்படுகிறது. இதன் பேரில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுத்தப் பாடில்லை என்று இந்திரா நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சினேகா நந்தியால் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திரா நகர் பகுதியில், வசித்து வரும் இவர், வீட்டின் அருகே போர்வெல்கள் தோண்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கும் அமைதியின்மை கெட்டுள்ளது. சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போர்வெல் தோண்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதா என காண்ட்ராக்டர் இடத்தில் கேட்டபோது, அவரிடம் உரிய பதில் கிடைக்கவில்லை.மாநகராட்சி பொறியாளரிடமும், போர்வெல் தோண்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதா என்று கேட்டபோதும் அவரும் சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. அண்மைக்காலமாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது.
. போர்வெல்களில் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. எனவே போர்வெல் தோண்டுபவர்கள் மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆயினும், இதை யாரும் ஒரு பொருட்டாகவே கவனிக்கவில்லை. என்றார்.
இந்திரா நகரை சேர்ந்த சொர்ணா வெங்கட்ராமன் என்பவர் கூறுகையில், எங்கள் குடியிருப்பு பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.