பெங்களூரில் சட்ட விரோத குடிநீர் இணைப்பு அதிகரிப்பு – குடிநீர் வாரியம் எச்சரிக்கை

பெங்களூர், மே. 2- நகரில் அனுமதியின்றி நிலத்தடி சாக்கடைகள் மற்றும் குடிநீர் தொடர்புகளை பெற்றுள்ளவர்களுக்கு அபாரதத்துடன் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நகரின் தெற்கு பகுதியில் இந்த வகையில் அதிக நோட்டீஸ்களை குடிநீர் வாரியம் அனுப்பியுள்ளது. பெங்களூர் கிரேட்டர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் மற்றும் நிலத்தடி சாக்கடை தொடர்புகளை அனுமதியின்றி சட்டவிரோதமாக பெற்றுள்ளவர்கள் அவற்றை முறைப்படுத்திக்கொள்ள மே 7 வரை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வாரியம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி ைப்படுத்திக்கொள்ளவேண்டும். தவறினால் தொடர்புகள் துண்டிக்கப்படும் . பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் நிலத்தடி சாக்கடை சட்டம் 1964 பிரிவு 65 மற்றும் 75ன் படி குடிநீர் மற்றும் நிலத்தடி சாகடி தொடர்புகளுக்கு நீர் வாரியத்திலிருந்து அனுமதி பெற்றிருக்கவேண்டும். இந்த சட்டத்தை மீறினால் குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய்கள் அபராதம் விதிக்கப்படும்.
தவிர தொடர்பு துண்டிக்கப்படுவதுடன் மறு தொடர்பு கொடுக்கும் செலவையும் நீர் வாரியத்திற்கு செலுத்தியாக வேண்டும். இது தவிர சட்டத்தின் கீழ் புகார் பதிவானால் இந்த சட்டத்தின்படி ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.குடிநீர் வாரிய ஊழியர் நோட்டீஸ் அளித்த பின்னர் நகரின் பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் சட்டவிரோத தொடர்புகளைமுறைப்படுத்திக்கொண்டுள்ளனர். தென்மேற்கில் 2 பிரிவுகள் மற்றும் தெற்குப்பகுதியில் ஒரு பிரிவில் தலா 22, வட கிழக்கு பகுதியில் 11 மற்றும் கிழக்கு பகுதியில் 10 தொடர்புகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தம் 221 தொடர்புகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன . என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு பகுதியில் ஒன்று , இரண்டு பிரிவுகளில் முறையே 46 மற்றும் 28 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது , ஆனால் இதுவரை இவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மத்திய பிரிவிலும் 14 நோட்டிஸ்கள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. வடக்கு பிரிவில் 40 , தெற்கு பிரிவில் 39 , தென்மேற்கு பிரிவில் ஒரு பகுதியில் 39 , இரண்டாவது பகுதியில் இரண்டாவது பிரிவில் 36 நோட்டிஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன . மொத்தம் 390 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதுடன் இவற்றில் எங்கும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை . குடிநீர் வாரிய அதிகாரிகள் ஏப்ரல் மாதம் இரண்டு வாரங்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அதன்படி அனுமதியின்றி குடிநீர் தொடர்புகள் வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். முன்வரும் நாட்களில் செயல் பொறியாளர் மட்டத்தில் அனைத்து வீதிகளிலும் தொடர்புகள் பெற்றுருப்பவர்கள் குறித்து ஆவணங்களை பரிசீலனை செய்ய குடிநீர் வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார் . நகரில் நிலத்தடி சாக்கடை மற்றும் குடிநீர் தொடர்புகளை அனுமதி இன்றி சட்டவிரோதமாக பெற்றிருப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் பொது மக்கள் 1916 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் கொடுக்கலாம் என்றும் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். குழாய்களுக்கு ஏரியேட்டர் பொருத்தவும் கெடு மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . பின்னர் மே 8 முதல் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் சிக்கன உபயோகத்தை ஊக்குவிக்கும் வகையில் மால்களில் வர்த்தக வளாகங்கள் , அரசு கட்டிடங்கள் ஆடம்பர ஓட்டல்கள் மற்றும் வழிபாடு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைக்காக பயன்படுத்தும் குழாய்களில் கண்டிப்பாக ஏரியேட்டர்கள் பொறுத்த ஏப்ரல் 30 வரை வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருந்தது. நகரில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான ஏரியேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மே 8க்கு பின்னர் குழாய்களுக்கு ஏரியேட்டர் பொறுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.