
பெங்களூர், மார்ச் 4-
பெங்களூர் மாரப்பன பாள்யாவின் வீடு ஒன்றில் எல்.பி.ஜி. கியாஸ் கசிவு ஏற்பட்டு, வெடித்து சிதறியது. இதில் 13 பேர் காயமடைந்தனர்.
பெங்களூர், மாரப்பன பாளையாஇரண்டாவது பிரதான சாலை, நான்காவது கிராஸில், கட்டிடத்தில் முதல் மாடியில் அஜ்மல் (46) என்பவர் தனது குடும்பத்துடன் வசிக்கிறார்.
இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு விருந்து நிகழ்ச்சி இருந்தது. உறவினர்கள் வந்திருந்தார்கள் .இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு உணவு தயாரித்த பின் கியாஸை ஆப் செய்யவில்லை. அதிலிருந்து கியாஸ் கசிந்து உள்ளது.
அதை யாரும் கவனிக்கவில்லை. நேற்று காலை 6:30 மணியளவில் மின் விளக்கை ஆன் செய்ததும், சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் வீட்டின் சுவர் இடிந்துள்ளது. பாத்திரம் பொருட்கள் சிதறியது.
இந்த சப்தத்தை மூன்றாவது மாடியில் இருந்த நபர் ஒருவர் சப்தம் கேட்டு உடனடியாக தீயணைப்பு படைக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.வீட்டில் இருந்த சபா (18) மேஹரின் தாஜ் (11)
சோஹெப், அசாம், அட்மின்
ஆகிய மூவரும் ஐந்து வயது. ரியான் (14) உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.