பெங்களூரில் சில ரயில் சேவை ரத்து

பெங்களூரு, அக். 12: பராமரிப்பு பணிகள் காரணமாக பெங்களூரில் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண்கள் 06551/06552 கேஎஸ்ஆர் பெங்களூரு-ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் அக். 12, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் லட்டேரி மற்றும் காவனூர் பிரிவுகளுக்கு இடையேயும், ஜோலார்பேட்டை யார்டுக்கும் இடையேயும் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 06269 மைசூரு-எஸ்எம்விடி பெங்களூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் பெங்களூரு கன்டோன்மென்ட் மற்றும் பையப்பனஹள்ளி இடையே பராமரிபொபு பணிகள் காரணமாக பெங்களூரு கண்டோன்மென்ட்டில் நிறுத்தத்தைத் தவிர்த்து, கேஎஸ்ஆர் பெங்களூரு, யஷ்வந்த்பூர், லொட்டேகொல்லஹள்ளி, ஹெப்பாள், பானஸ்வாடி மற்றும் எஸ்எம்விடி பெங்களூரு வழியாக அக்டோபர் 19 முதல் ஜனவரி 18 வரை இயக்கப்படும்.
ரயில் எண்கள் 08543/08544, பெங்களூரு-விசாகப்பட்டினம் இடையேயான‌ வாராந்திர சிறப்பு ரயில்கள், செப்டம்பர் 24 ஆம் தேதி வரை இயகப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த ரயில்களின் சேவை நவம்பர் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் பெங்களூரு கண்டோன்மென்ட்டிற்கு பதிலாக எஸ்எம்விடி பெங்களூரில் இருந்து புறப்பட்டு செல்லும். அதே போல அங்கிருந்து வரும் ரயில் எஸ்எம்விடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.