பெங்களூரில் சீட்டுக்கட்டு போல் சரியும் கட்டிடங்கள்

பெங்களூரு, அக். 13- பெங்களூரில் இன்றும் ஒரு 3 மாடி கட்டிடம் பைசா சாய்ந்த கோபுரம் போல் அப்படியே சாய்ந்தது. எந்த நிமிடமும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது அங்கிருக்கும் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறினர் பின்னர் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இந்த வீடு இடிக்கப்பட்டது இந்த மூன்று மாடிக்கட்டிடம் இடிக்கப்பட்ட போது அது பக்கத்தில் இருந்த 3 மாடி கட்டிடம் மீது விழுந்ததில் அதுவும் கீழே விழுந்தது இதனால் பரபரப்பு ஏற்பட்டது கமலா நகரின் ஷங்கர் நாக் பஸ் நிலையம் அருகில் இந்த சம்பவம் நடந்தது.. இங்கு ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான மூன்று அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்தது.கட்டிடம் இடிந்து விழும் என்ற முன்னெச்சரிக்கை கிடைத்தவுடனேயே அதில் வசித்து வந்த நான்கு குடும்பங்கள் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்திருப்பதுடன் வீடுகளில் உள்ள விலை மதிப்புள்ள பொருள்களையும் வெளியே கொண்டுவரப்பட்டு மற்ற சாதாரணப்பொருட்கள் வீட்டுக்குள்ளேயே உள்ளன. இடியப்போகும் கட்டடத்தில் உள்ள குடும்பங்கள் தற்போது திக்கு திசையின்றி குழம்பிபோயுள்ளன. இதே கட்டிடத்தில் ஆறு குடும்பங்கள் வசித்து வந்தன. ஆனால் மிகவும் பாழடைந்த நிலையில் இருந்ததால் மூன்று வீடுகள் காலி செய்யபட்டன . . தற்போது இந்த கட்டிடத்தில் நான்கு குடும்பங்கள் வசிக்கின்றன. இப்போது இந்த கட்டிடம் இடியும் நிலை ஏற்பட்டதால் இந்த இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் நிர்வகிப்பு குழுவின் (ஏன் டி ஆர் எப் ) வல்லுனர்களின் பரிசீலனைக்கு கட்டிடங்கள் எடுக்கப்பட்டன.