பெங்களூர், அக் 28-
பெங்களூர் உட்பட பல்வேறு இடங்களில் திருடப்பட்ட விலை உயர்ந்த செல்போன்களை தமிழகம், கேரளா ஆகிய
மாநிலங்களில் விற்பனை செய்து வந்த கும்பல் போலீசாரிடம் பிடிபட்டது.
இவர்கள் வசம் இருந்த பல்வேறு கம்பெனிகளில் 1,037 உயர் ரக மொபைல் ஃபோன்களை போலீசார் மீட்டுள்ளனர். இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.பெங்களூர் ரூரல் மாவட்டம், பன்னார்கட்டா சாலையில் திருடுப் போன செல்போன்களை மறு விற்பனை செய்ய தமிழகம் கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கு கடத்தும் கும்பலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஆரிப் பாட்ஷா என்ற முகமது மும்மூத் பாஷா, முகமது உமர், ஐயன் என்ற ஆலிம் பாஷா, மற்றும் முகமது சலீம். இவர்கள் அனைவரும் 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்.
பன்னார்கட்டா சாலையில் உள்ள ஏ. எம். சி இன்ஜினியரிங் கல்லூரி அருகே சந்தேகப்படும்படியான இருவர் நடமாடியதாக
அக்டோபர் 21ம் தேதி ஆரிப் மற்றும் உமர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் ஒரு அட்டைப் பெட்டியில் 100 செல்போன்களை எடுத்துச் சென்றதை அவர்கள் கண்டுபிடித்தனர். ஆலிம், சலீம் ஆகிய இருவரை அக்டோபர் 26ம் தேதி கைது செய்தனர். 82 மொபைல் ஃபோன்களை ஆலிமிடமும் 185 போலீசார் மீட்டனர். இவர்கள் ஹெக்டே நகர் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். அங்கு அவர்கள் வீட்டில் 770 செல்போன்கள் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதில் ஆரிப் ,பன்னரகட்டா தேசிய பூங்கா அருகே ஏமாற்றி கோரிப்பாளையம் சேர்ந்த முகமது இலியாஸ், முஸ்தாக் என்ற முஸ்தி உஸ்மான், ஆரிப், சல்மான் ஷாகில், மசார், அப்சர், மைசூரை சேர்ந்த நசீர் ஆகியோர்களிடம் ஃபோன்களை திருடிய உள்ளார். ஒப்புக்கொண்டார்.
மெஜஸ்டிக், சிவாஜி நகர் ஜெய் நகர், எம் ஜி ரோடு, என மக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களில், மற்றும் பி.எம்.டி.சி. பஸ்களில் 2000 முதல் 3000 ரூபாய் விலைக்கு மொபைல் போன்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டு வந்த மஞ்சேரி மற்றும் தமிழகத்தில் சென்னை ஆகிய இடங்களுக்கு தனியார் பேருந்துகளில் மறு விற்பனை செய்வதற்காகவும் அனுப்பி உள்ளனர் என்று மத்திய மண்டல ஐஜிபி ரவி காந்தே கவுடா தெரிவித்துள்ளார்.