பெங்களூரில் செல்போன் பறிப்பு அதிகரிப்பு

பெங்களூர், செப் 19-
பெங்களூரில் மொபைல் போன் பறிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு பெரும் தலைவலி ஆக உள்ளது.
அவ்வப்போது திருடர்களை கைது செய்து நூற்றுக்கணக்கான மொபைல் போன்களை பறிமுதல் செய்கின்றனர். தற்போது மொபைல் போன் பறிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த மாற்று வழியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய அரசு வகுத்துள்ள சி இ ஆர் எனும் சென்ட்ரல் எக்விப்மென்ட் ஐடென்டிடி
ரெஜிஸ்டர் செயலியை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.மொபைல் போனை பறிகொடுத்தவர்கள் அல்லது தொலைத்தவர்கள் பெங்களூர் போலீசாரின் இ- லாஸ்ட் செயலில் ஐ. எம். இ. ஐ.,
எனும் மொபைல் போனுக்கான அடையாள என்னுடன் புகார் அளிக்க வேண்டும்.
அதன் பின் சி .இ.ஐ.ஆர். சேவைக்கு தகவல் அனுப்பப்படும். இதன் வழியாக மொபைல் செயல்பாடு முழுவதுமாக துண்டிக்கப்படும்.மொபைல் எண் பிளாக் ஆகும் . எந்த வகையிலும் செயல்படாது மொபைல் போனை திருடினாலும் அதை பயன்படுத்த முடியாது. திருட்டு மொபைல் போன் செய்யப்பட்டவுடன் லொகேஷனை கண்டுபிடிக்கப்படும்.
டில்லி, மும்பையில் இந்த செயலி பயன் படுத்தப்படுகிறது.பெங்களூரிலும் மொபைல் போல் திருட்டை கட்டுப்படுத்த இதை பயன் படுத்த போலீசார் தயாராகின்றனர்