பெங்களூரில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

பெங்களூரு, மே 4- கடந்த சில ஆண்டுகளாக ஆன் லைன் மோசடி புகார்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது . வங்கி துறையை தீவிர டிஜிட்டல் மயமாக்கியதும் இத்தகைய சைபர் குற்றங்கள் அதிகரித்து வர காரணமாகும். இவற்றை தவிர்க்க பல வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் கடுமையான சோதனைகள் பாதுகாப்பு முறைகளை நடைமுறை படுத்தியிருப்பினும் சைபர் குற்றவாளிகள் இவற்றை எல்லாம் மீறி புதுப்புது யுத்திகளை பயன்படுத்தி மக்களிடம் மோசடி செய்து வருகின்றனர். இது குறித்து பெங்களூரை சேர்ந்த அதிதி என்ற தொழில் வல்லுநர் தான் எப்படி ஏமாற்றப்படுவதிலிருந்து மயிரிழையில் தப்பித்தது குறித்து தன் அனுபவத்தை கூறுகையில் இப்போது பல புது முறைகளை கையாண்டு சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்களை குழப்பி அவர்களின் பணத்தை திருடும் வகையில் குற்றவாளிகள் மிகவும் கவனத்துடன் எஸ் எம் எஸ் தகவல்களை அனுப்புகின்றனர். நான் அலுவலக போனில் தீவிரமாக இருந்த பொது அடையாளம் தெரியாத ஒருவன் எனக்கு போன் செய்து தான் பணத்தை ஏன் தந்தை கணக்கிற்கு மாற்ற வேண்டும் என கூறினான். தன்னுடைய வங்கி கணக்கில் சில சிக்கல்கள் இருப்பதால் பணத்தை மாற்ற என் உதவியை கோரினான் . பின்னர் என்னிடம் என் வங்கி கணக்கு எண்ணை சொல்லி அது சரியுள்ளதா என கேட்டான். உடனே சில நிமிடங்களில் முதலில் எனக்கு 10 ஆயிரம் கடன் அனுப்பிவைக்கப்பட்டதாக வந்தது. பிறகு மீண்டும் 30 ஆயிரம் அனுப்பியிருப்பதாக எஸ் எம் எஸ் வந்தது சில நிமிடங்களில் அச்சு அசலாக வங்கி அறிவிப்புபோலவே ஒரு எஸ் எம் எஸ் எனக்கு வந்தது. அதில் பணம் என்னுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அதே நபர் எனக்கு போன் செய்து தான் மூன்றாயிரத்திற்கு பதிலாக தவறி முப்பதாயிரம் ருபாய் தொகை மாற்றிவிட்டதாகவும் அந்த அதிக தொகையை திருப்பி தனக்கு அனுப்புமாறும் தான் உடனே அந்த பணத்தை மருத்துவருக்கு கொடுக்கவேண்டும் என்றும் தவிர என்னை நம்பவைக்க அவன் கதறி அழுதபடியே பாக்கி பணத்தை திருப்பி அனுப்புமாறு கதறினான். அவனுடைய வெடிப்பு மற்றும் வர்ணிப்புகளை பார்த்து எனக்கு சந்தேகம் வந்தது. தெரிவித்தான். ஆனால் நான் எஸ் எம் எஸ் தகவல்களை மிகவும் விரிவாக நுட்பமாக ஆய்வு செய்ததில் இது ஒரு மோசடி என்றும் நான் சைபர் குற்றவாளியின் வலையில் சிக்கியுள்ளதும் தெரியவந்தது. எனவே யாரும் பணம் சம்மந்த பட்ட எஸ் எம் எஸ்கள் குறித்து படிக்கலாமே தவிர முழுதாக நம்பி விட கூடாது. இவ்வாறு அதிதி தெரிவித்தார்.