பெங்களூரில் தனித்தனி சாலை விபத்துக்கள் 5 பேர் பலி

பெங்களூர், செப். 21-
பெங்களூரில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை நடந்த சாலை விபத்துகளில் ஐந்து பேர் பலியானார்கள்.இறந்தவர்கள் வேணுகோபால் (60) தனுஷ் (23) வசந்தமா(65) அருவத்தைந்து சாலமோன் (24) இன்னொருவர் 45 வயதுடையவர் யார் என அடையாளம் தெரியவில்லை.
விபத்துகள் விபரம் வருமாறு:
பெங்களூரில் செவ்வாய் இரவு 9:30 மணிக்கு
லால்பாக் சாலை அருகே உள்ள எம் எச் மரிகவுடா சாலையில், வேணுகோபால் (60) என்பவர் சாலையை கடக்கும் போது, தீபிகா என்ற பெண் ஹோண்டா ஆக்டிவ் ஸ்கூட்டரில் வந்து அவர் மீது மோதினார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  • பினியா போக்குவரத்து துறை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தும்கூர் சாலை
    எஸ் .ஆர் .எஸ்., ஜங்ஷனில் சாலை கடக்கும்போது கிருஷ்ணா என்பவர் ஓட்டி வந்த லாரி ஒருவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
    மருத்துவமனை அழைத்து சென்றனர் அங்கு அவர் உயிரிழந்தார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
  • மைக்கோ லேஅவுட் பகுதியில், நள்ளிரவு நேரத்தில் அனுமந்தா நகரை சேர்ந்த சாலமோன் நித்தின் என்பவர், பிஸ்மில்லா நகரில் இருந்து பன்னார்கட்டா சாலைக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சாலையின் குறுக்கே சரக்கு லாரி இவர் மீது மோதியது. இதில் அவர் இறந்தார் .இதனால் லாரி டிரைவர் ராமேஸ்வர தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • புதன்கிழமை அதிகாலை 2.50 முதல் 3 மணி குள் ராஜராஜேஸ்வரி நகர் மெயின் ரோட்டில் உத்தரழி நோக்கி மோட்டார் பைக்கில் தனுஷ் என்பவர் பிஜேபி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை தடுப்பில் மோதினார்.
    இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி பலியானார்.
  • புதன் கிழமை காலை 8 மணிக்கு ஞானபாரதி மெயின் ரோடு வசந்தமா என்பவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார் அப்போது இவருக்கு பின் வந்த கார் ஒன்று ஸ்கூட்டரை முந்தி சென்றபோது ஸ்கூட்டரின் கைப்பிடி மோதியது இதில் ஸ்கூட்டரில் சென்றவர் படுகாயம் அடைந்தார் இந்த விபத்தில் வசந்தமாவும் வெளியானார் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.