
பெங்களூர், ஜன.6-
பெங்களூர் குமாரசாமி லே-அவுட் இரண்டாவது ஸ்டேஜ் பகுதியில் தனியாக இருந்த பெண்ணை கைக் கால் கட்டி போட்டு, வாயை பிலாஸ்டரால் ஒட்டி,விட்டு பலமாக தாக்கி, நகைகள், பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
குமாரசாமி லே-அவுட் இரண்டாவது ஸ்டேஜ், மூன்றடுக்கு மாடியில் ஒன்றாவது மாடியில் குடியிருப்பவர் ஸ்ரீ லட்சுமி.
இவரது மகள் டாக்டர் வைஷ்ணவி சுரேஷ். டாக்டர் கிளினிக் ஒன்றிற்கு சென்றிருந்தார்.
மாலை 5 மணி அளவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி உள்ளனர். கூரியர் வந்திருப்பதாக கூறியதால் கதவை ஸ்ரீ லட்சுமி திறந்து உள்ளார்.
கதவு திறந்த உடனே நான்கு பேரும் வீட்டுக்குள் நுழைந்தனர். ஸ்ரீ லட்சுமியின் கைகளை கால்களை கட்டிப் போட்டு வாயை பிளாஸ்டரால் ஒட்டி உள்ளனர். மொபைல் போனை பறித்துள்ளனர்.
வீடு முழுக்க தேடி நகைகளை பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்.
85 கிராம் தங்க நகைகள் 3.5 லட்சம் ரூபாய் ரொக்க பணம், செல் போன் ஆகியவற்றையும் பறித்து சென்றுள்ளனர்.
ஸ்ரீலட்சுமி தாக்கியும் உள்ளனர் .
வழக்கமான வேலையை முடித்துக் கொண்டு மாலை 5 மணிக்கு மேல் டாக்டர் வைஷ்ணவி வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது தாயை கட்டி போட்டு இருப்பதை பார்த்துள்ளார். நடந்த சம்பவத்தை தெரிந்து கொண்டு ,போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.