
பெங்களூர், மார்ச் 1-
பெங்களூரில் நாள்தோறும் 1,450 எம்.எல்.டி., குடிநீரை, குடிநீர் வடிகால் வாரியம் சப்ளை செய்து வருகிறது. இதில் 29 சதவீதமான
420 எம்.எல்.டி. நீர் வீணாகிறது. வாகனங்கள் இயங்குவதால் குடிநீர் குழாய் பைப்புகள் உடைந்து சேதம் ஆவதால் 87 எம். எல். டி . நீர் வீணாகிறது.
அதுமட்டுமின்றி பொதுக் குழாய், வீடுகளுக்கு இணைப்பு , மற்றும் மீட்டர் பொறுத்தலில் குளறுபடி ஆகியவற்றால் குடிநீர் வீணாகிறது.
பெங்களூர் பெருநகருக்கு காவிரி ஒன்றாவது ஸ்டேஜில் 135 எம். எல். டி.,காவேரி இரண்டாவது ஸ்டேஜில் 140 எம். எல். டி., காவேரி மூன்றாவது ஸ்டேஜில் 325 எம். எல். டி., காவிரி நான்காவது ஸ்டேஜில் 300 எம். எல். டி .காவேரி நான்காவது ஸ்டேஜ் இரண்டாவது கட்டத்தில் 550 எம். எல். டி .என மொத்தம் 1,450 எம்.எல்.டி., தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
இதில் வீணாவது பற்றிய விபரத்தில் பொதுக்குழாய் மூலம் 58 எம்.எல்.டி., வீடுகளுக்கு வழங்கும் இணைப்பில் 72.5 எம்.எல். டி.தவறுதலான மீட்டர்களால் 72.5 எம்.எல்.டி., குடிசைப்பகுதிகளில் 58 எம்.எல்.டி., பழைய துருப்பிடித்த படைப்புகளில் 72.5 எம். எல். டி., வாகனங்களால் ஏற்படும் பாதிப்பால் 87 எம். எல். டி.,
என் மொத்தம் 420.5
எம்.எல்.டி வீணாகிறது என்று தெரிய வந்துள்ளது.குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ஜெயராம் கூறுகையில், 45 சதவீத குடிநீர் வீணாவதை
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 38 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும் இதனை 29 சதவீதமாக குறைத்துள்ளோம். 100 சதவீதமாக குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
பெங்களூரில் உள்ள பழைய பைப்புகளை மாற்ற 8000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இது பெரிய தொகையாக இருப்பதால் படிப் படியாக நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மையும் தெரிவித்துள்ளார்.