பெங்களூரில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

பெங்களூர், டிச.29-
பெங்களூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரிசோதனை தினமும் 5 ஆயிரம் பேருக்கு நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 141 ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவ சோதனை நடத்தப்படுகிறது.
அண்மையில், பெங்களூரில் ஆயிரம் பேருக்கு கோவிட்- 19 டெஸ்ட் செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து இருப்பதால், மொபைல் பரிசோதனையை தீவிர படுத்த ப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ஆலோசனை குழு என்கிற டெக்னிக்கல் அட்வைஸரி கமிட்டி அறிவுறுத்தலின்படி,
தினமும் ஐந்தாயிரம் பேருக்கு இந்த மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதி மட்டும் 5,500 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என்று, பெங்களூர் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு சிறப்பு ஆணையர் திரிலோச்சந்தர் தெரிவித்தார்.
சர்வதேச விமான நிலைய பகுதியில் இரண்டு சதவீதம் பேருக்கு ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டது. இது ஓர் ஆண்டாக நடத்தப்பட்டு வந்தன.
கொரோனா தொற்று பாதிப்பு ‘பாசிட்டிவ்’ இருப்பது தெரிய வந்தால், அவர்களை உடனடியாக பவுரிங் மருத்துவமனைக்கு, அல்லது அவர்கள் விரும்பும் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 19 பேருக்கு பாசிடிவ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.