பெங்களூரில் திமுக பிரமுகர் வெட்டப்பட்ட ஓட்டலில் சாந்தி ஹோமம்

பெங்களூர் : செப்டம்பர். 6 – தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான தி மு கா கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் வி கே குருசாமி மீது ஆய்தங்களால் தாக்கி அவரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க கிழக்கு பிரிவு ஏ சி பி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் நேற்று காலை தமிழகம் சென்றிருக்கும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நகரின் பானசாவாடி போலீஸ் சரகத்தில் உள்ள கம்மனஹள்ளி சுக் சாகர் ஓட்டலில் திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் ப்ரோகருடன் தேநீர் அருந்திக்கொண்டிருந்த சமயத்தில் காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் குருசாமியை தாக்கி கொலை செய்ய முயற்சித்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த குருசாமியை ஓட்டல் ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். குருசாமிக்கு க்யூரா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது. இவருடைய குடும்பத்தினர் தமிழ் நாட்டிலிருந்து நகருக்கு வந்துள்ளனர் தமிழகத்திலிருந்து குருசாமியை பின்தொடர்ந்து வந்த குற்றவாளிகள் தடாலடியாக காரில் இருந்து இறங்கி ஓட்டலுக்குள் நுழைந்து குருசாமியை தாக்கியுள்ளனர். இவர்கள் வந்த காரின் ஓட்டுநர் காரிலேயே இருந்துள்ளான். மற்றவர்கள் குருசாமியை தாக்கி விட்டு தப்பி சென்ற காட்சிகள் ஓட்டலில் உள்ள சி சி டி வி காமிராக்களில் பதிவாகியுள்ளது . போலீசார் தற்போது இந்த காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகள் வந்த கார் தமிழகத்திற்கே சென்றிருப்பது உறுதியாகியுள்ளது. நகரின் புறப்பகுதியில் அந்த காரை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்த முயற்சித்தும் இயலவில்லை. தற்போது கிடைத்துள்ள முதல் தகவலின்படிபழைய பகையால் எதிர் கோஷ்டியினர் குருசாமியை தாக்கியுள்ளனர். குருசாமி மதுரை நகரில் அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் மிகவம் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தொழில் விஷயமாக மற்றொரு குழுவுடன் இவருக்கு பகைமை உருவாகியுள்ளது. தவிர குருசாமியின் பெயர் ரௌடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது கொலை , மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தவிர திங்கட்கிழமை இந்த தாக்குதல் நடந்த கம்மனஹள்ளியின் ஸுக் சாகர் ஓட்டலில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் சாந்தி ஹோமங்கள் நடத்தியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் குருசாமி தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் மகன் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது